உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

அமெரிக்காவின் அதிரடி உத்தரவால் 13 ஆயிரம் அகதிகள் தவிப்பு!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளை, அவர்கள் ஒரு போதும் சென்றிராத 3-வது நாடுகளுக்கு நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆப்கானிஸ்தான், வெனிசுலா, கியூபா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தப்பி வந்த சுமார் 13ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளனர். குறிப்பாக, ஸ்பானிஷ் மொழி பேசும் லத்தீன் அமெரிக்கர்களை ஆப்பிரிக்க நாடான உகாண்டாவுக்கும், ஆப்கானிஸ்தான் அகதி களை ஹோண்டுராஸூக்கும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து அவர்களின் சட்டப்பூர்வ வேலை அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.


அகதிகளை தானாகவே சொந்த நாடுகளுக்குத் திரும்ப வைப்பதற்கான ஒரு தந்திரமான செயல் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், இந்த விசித்திரமான நாடு கடத்தல் உத்தரவால் பல்லாயிரக்கணக்கானோரின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0