உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

உகாண்டா: ஆரம்பப் பாடசாலையில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 குழந்தைகள் பலி – அதிர்ச்சி சம்பவம்…

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் இயங்கிவரும் ஆரம்பப் பாடசாலையொன்றினுள் கத்தியுடன் நுழைந்த நபர், அங்கிருந்த சிறுவர்களை கத்தியால் தாக்கியதில் 4 சிறுவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை ஏப்ரல் 02 ஆம் திகதி இந்த கொடூர கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, 34 வயதுடைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஒரு சிறுமியும் மூன்று சிறுவர்களும் கொல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் சிறுவர் ஒருவரின் பெற்றோர் போன்று தன்னை வெளிப்படுத்தி, பாடசாலை அலுவலகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பொறுப்பு நிர்வாகியுடன் சிறிது நேரம் உரையாடியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளதாக உள்ளூர் பத்திரிகையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாகியுடன் உரையாடிவிட்டு, வெளியே சென்ற அந்த நபர், வாயிலை பூட்டிவிட்டு, சிறுவர்களை தாக்கத் தொடங்கியதாகவும், அவ்வேளை அருகில் உள்ள தேவாலயத்தின் பாதுகாப்பு ஊழியர், தாக்குதலில் ஈடுபட்டிருந்த சந்தேக நபரை தடுத்து நிறுத்தியதாகவும் அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைகளுக்கான நோக்கம் குறித்து அறிவதற்கு சந்தேக நபரிடம் பொலிஸார் தொடர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0