உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

பாகிஸ்தானில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்து வரும் நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் ஏப்ரல் 02 ஆம் திகதி நேற்றைய தினம் டீசல் மற்றும் பெற்றோல் விலைகளை கடுமையாக உயர்த்தியது.

இது ஒரு மாதத்திற்கும் குறைவான காலக்கட்டத்தில் எரிபொருளுக்கான விலையை பாகிஸ்தான் அரசாங்கம் இரண்டாவது முறையாக அதிகரித்த சந்தர்ப்பமாகும்.

அதன்படி, ஒரு லிட்டர் டீசலின் விலை 54.9 சதவீதம் உயர்ந்து 520.35 பாகிஸ்தான் ரூபாவாகவும், ($1.88), ஒரு லீட்டர் பெற்றால் விலை 42.7 சதவீதம் உயர்ந்து 458.40 பாகிஸ்தான் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட இந்த விலை உயர்வுகள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளன.

சர்வதேச மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று பாகிஸ்தானின் பெற்றோலியத் துறை அமைச்சர் அலிபர்வேஸ் மாலிக் கூறினார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஏற்பட்ட எண்ணெய் விலை உயர்வை காரணமாகக் காட்டி, கடந்த மாதம் பாகிஸ்தான் ஏற்கனவே டீசல் மற்றும் பெற்றோல் விலைகளை சுமார் 20% உயர்த்தியிருந்தது.

இந்த அண்மைய விலை உயர்வானது, பணவீக்கத்தை மேலும் உயர்த்தி, நாட்டின் வறிய மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான், முக்கியமாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஹார்முஸ் நீரிணை வழியாக இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை பெருமளவில் சார்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0