உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஏப்ரல் 28 அன்று அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றவுள்ளார் மன்னர் சார்லஸ்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் சார்லஸ் தனது வொஷிங்டன் பயணத்தின்போது, ​​ஏப்ரல் 28 ஆம் திகதி அன்று அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றுவார் என்று பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜோன்சன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து அமெரிக்கா சுதந்திரம் பெற்றதன் 250 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்ட பயணத்தின் ஒரு பகுதியாக சார்லஸும் அவரது மனைவி ராணி கமிலாவும் அமெரிக்காவுக்குச் செல்வார்கள் என்றும், அதைத் தொடர்ந்து இந்தத் தம்பதியினர் பெர்முடாவுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

ஈரான் போரினால் பாதிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான உறவுகளைச் சரிசெய்ய இங்கிலாந்து அரசாங்கம் முயன்று வரும் வேளையில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த பயணம் இடம்பெறவுள்ளது.

2007 ஆம் ஆண்டில் ​​சார்லஸின் தாயாரான எலிசபெத் ராண, தனது ஆட்சிக்காலத்தில் நான்காவது முறையாக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதன்பின்னர் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.

மன்னர் மற்றும் ராணியின் பயணம் ஏப்ரல் 27 ஆம் திகதி அன்று தொடங்கும் என்றும், மறுநாள் வெள்ளை மாளிகையில் நடைபெறும் விருந்துடன் இதுஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0