உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

பிரித்தானிய சுகாதாரத் துறையில் உச்சகட்ட பதற்றம்: 48 மணி நேரக்கெடு விதித்தார் பிரதமர் ஸ்டார்மர்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
46 பார்வைகள்

அடுத்த 48 மணி நேரத்திற்குள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் கைவிடப்படாவிட்டால், மருத்துவர்களுக்காக முன்வைக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர்அறிவித்துள்ளார்.

இதில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள், கூடுதல் பயிற்சி இடங்கள் மற்றும் ஊதிய சீர்திருத்தங்கள் குறித்த திட்டங்கள் அடங்கும். இந்தச் சலுகைகளைத் திரும்பப் பெற்றால், அது மருத்துவத் துறையில் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் பயிற்சி மருத்துவர்கள் குழு, அரசாங்கம் வழங்க முன்வந்துள்ள 3.5வீத ஊதிய உயர்வு, தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஈடுகொடுக்க போதுமானதாக இல்லை என வாதிடுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட ஊதிய இழப்புகளை ஈடுகட்ட கணிசமான உயர்வு தேவை என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

இருப்பினும், பிரதமர் ஸ்டார்மர் இந்த வேலைநிறுத்தத்தை ‘அலட்சியமானது’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய 3.5வீத முன்மொழிவு பணவீக்கத்தை விட அதிகமானது என்றும், இது நடைமுறைக்கு வந்தால் மூன்று ஆண்டுகளில் மருத்துவர்களின் மொத்த ஊதிய உயர்வு 35வீதம் ஆக உயரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ‘

இதேவேளை, எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாத சூழலில், திட்டமிட்டபடி ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் ஆறு நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இது ஏற்கனவே பணிச்சுமையால் திணறி வரும் NHS மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் ரத்து செய்யப்பட வழிவகுக்கும்.

அரசாங்கத்தின் இந்த 48 மணி நேரக் கெடு, மருத்துவ சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இக்காலக்கெடு முடிவடைவதற்குள் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், பிரித்தானிய சுகாதாரத் துறை ஒரு பாரிய நெருக்கடியைச் சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0