உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்: மலேசியா அரசு அனுமதி!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
53 பார்வைகள்

ஈரான் – அமெரிக்கா போரால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன. எரிபொருள் செலவுகளை குறைப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருகின்றன.

அந்த வகையில், மலேசியாவில் வீட்டில் இருந்தே பணியாற்ற அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் இந்த மாதம் முதல் வீட்டிலிருந்து பணியாற்றத் தொடங்குவார்கள் என்று பிரதமர் ”அன்வார் இப்ராஹிம் ” தெரிவித்துள்ளார். ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இந்த விதி அமலுக்கு வரும். அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது பொருந்தும்.

எரிபொருள் பயன்பாட்டை குறைத்து, விநியோகத்தை நிலையாக வைத்து இருக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசுகூறியுள்ளது. ஈரான் – அமெரிக்கா போர் மேலும் தீவிரம் அடையும் என்று சொல்லப்படும் நிலையில், உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் இப்போது இருப்பதை விட பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என அச்சம் எழுந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0