உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முக்கிய பெற்றோலிய இரசாயனப் பொருட்களுக்கான சுங்க வரியை தள்ளுபடி செய்த இந்தியா!

இந்திய செய்திகள் 8 மாதங்கள் முன்
112 பார்வைகள்

மேற்கு ஆசியாவில் தொடரும் போர்ச்சூழல் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோலியம் அடிப்படையிலான இரசாயன பொருட்களைச் சார்ந்துள்ள தொழில்களுக்கு இந்தியா தற்காலிக நிவாரண நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 2 ஆம் திகதியிட்ட இந்த அறிவிப்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய பெற்றோலியம் அடிப்படையிலான இரசாயனப் பொருட்களுக்கு 2026 ஜூன் 30 ஆம் திகதி வரை சுங்க வரியிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, விநியோகப் பற்றாக்குறையைத் தணிப்பதையும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த வரி விலக்கானது, பிளாஸ்டிக், பேக்கேஜிங், ஜவுளி, மருந்துகள், இரசாயனங்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் பிற உற்பத்தித் துறைகள் போன்ற, பெற்றோலியம் அடிப்படையிலான இரசாயன மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலைப் பொருட்களைச் சார்ந்திருக்கும் துறைகளுக்குப் பயனளிக்கும்.

மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதட்டங்கள், உலகெங்கிலும் உள்ள முக்கிய பெற்றோலிய இரசாயனப் பொருட்களின் நுகர்வினையும், விலையையும் பாதித்து வரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி வரிகளை நீக்குவதன் மூலம், இந்தியத் தொழில்களுக்குத் தேவையான அத்தியாவசிய மூலப்பொருட்கள் சீராகக் கிடைக்கும் என்ற இந்திய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் : மு.க.ஸ்டாலின் பதிவு

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நீதிக்கட்சி பிறந்தது…

145 0 0
இந்திய செய்திகள்

மறைந்த எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று (19) இரவு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.…

132 0 0
இந்திய செய்திகள்

‘ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ – வி.எஸ். பாபு மறைவுக்கு விஜய் உருக்கம்!

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது…

152 0 0
இந்திய செய்திகள்

தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு , உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் காலமானார்.…

149 0 0