உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரசார விதிமீறல்; முதல் நாளே விஜய் மீது வழக்கு!

இந்திய செய்திகள் 6 மாதங்கள் முன்
42 பார்வைகள்

தேர்தல் பிரசார விதிமுறைகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். கொளத்தூர் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் குமார், இதுகுறித்து பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், விஜய்யும் அவரைக் காணத் திரண்ட மூவாயிரம் பேரும் போக்குவரத்துக்குத் தடையாக இருந்தனர் எனப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமாக 5,000 பேர் கூடி, 30 ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி, சாலைப் பிரசார நிகழ்ச்சியை நடத்தி போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தியதாக உதவி தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். பிரசாரத்தின்போது அவ்வழியே செல்ல முயன்ற ஆம்புலன்ஸ் வாகனத்தின் பாதையை மறைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய முதல் நாளன்றே விஜய் மீது வழக்குப் பாய்ந்தது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார் தவெக தலைவர், விஜய் இதையடுத்து, பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அவர், கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது திரு விஜய் தேர்தல் விதிகளை மீறியதாக தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழு அதிகாரி அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், கொளத்தூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது என்ன நடந்தது என்பது குறித்தும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்தும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு பொறுப்பு காவல்துறை தலைவர் ஆகியோரிடம், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0