உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அல்புக்கர்க்கி பூங்காவில் பரபரப்பு: டிக்கெட் எடுக்காமலேயே பூங்காவை சுற்றி பார்த்த யானை ஆலிஸ்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள ரியோ கிராண்டே பகுதியில் ஏபிக்யூ உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த உயிரியல்பூங்கவில் மீன்கள் காட்சியகம், தாவரவியல் பூங்கா மற்றும் ஏரி ஆகியவற்றை உள்ளது.


இங்கு வனவிலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்களை பற்றி தெரிந்து கொள்ள ஒரு சிறந்த இடமாகும்.இங்கு யானைகளுக்கென்ற தனி பகுதி உள்ளது. இதில் யானைகள் சுதந்திரமாக நடமாடவும், குளிக்கவும் வசதியான புற்கள் மற்றும் மணல்பரப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில் உள்ள 52 வயது ஆசிய பெண் யானைஆலிஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் வேலியின் ஒரு பகுதியை உடைத்துக்கொண்டு வெளியேறியது.
சுமார் 10 நிமிடங்கள் பூங்காவின் நடைபாதையில் சுதந்திரமாக உலா வந்த ஆலிஸ், அங்குள்ள செடி கொடிகளை சாப்பிட்டு கொண்டிருந்தது.


இந்த காட்சியை கண்ட பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கு வந்த ஊழியர்கள் துரிதமாகசெயல்பட்டு, தங்களின் பயிற்சி மூலம் ஆலிஸை மீண்டும் அதன் இருப்பிடத்திற்கு அழைத்து வந்தனர்.


பாதுகாப்பு காரணங்களுக்காக பூங்கா 30 நிமிடம் தாமதமாக திறக்கப்பட்டது மேலும் உடைந்த வேலிகள் சரி செய்யப்பட்டதாக பூங்காநிர்வாகம் தெரிவித்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0