உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கூகுள், மைக்ரோசாப்ட் மீது தாக்குதல் நடத்துவோம்: அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
80 பார்வைகள்

அணு ஆயுதக் கொள்கையை கைவிடக் கோரி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த மாதம் 28 ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. ஒருமாதத்திற்கும் மேலாக இந்த தாக்குதல் நடைபெற்று வருகின்றது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்கி வருகின்றது. இதனால், அபுதாபி, துபாய், பஹ்ரைன், கத்தார் உள்ளிட்டஇடங்களில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.

அமெரிக்கா தாக்குதலை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் புரட்சிகர காவல் படையும் களத்தில் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள அந்த அமைப்பு, மேற்காசியாவில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களே இனி தங்களது இலக்கு என தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், இண்டெல், ஐபிஎம், டெஸ்லா, போயிங் உள்பட 18 நிறுவனங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் ஈரான் அறிவுறுத்தியுள்ளது.

தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களில் ஏ.ஐ.தொழில்நுட்பத்தை அமெரிக்கா பயன்படுத்துவதாக ஈரான் கருதுகின்றது.உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தாக்குதல் எச்சரிக்கை சர்வதேச அளவில் பரபரப்பைஏற்படுத்தியதுள்ளது.

ஈரான் கூறியது போல தாக்குதல் நடந்தால் பெரிய அளவில் தொழில் நுட்பத்துறையில் பல்வேறு சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0