இலங்கை சாரணிய சங்கத்தின் பருத்தித்துறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மாவட்ட ஆணையாளர் புவனேந்திரராசா தலைமையில் இன்று காலை 11:00 மணியளவில் பருத்தித்துறை கந்த உடையார் ஒழுங்கையிலுள்ள கருணை இல்லத்தில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து தேசிய கொடியினை நிகழ்வின் தலைவரும், சாரணிய சங்கத்தின் பதவி வழி தலைவருமான நடராசா திருலிங்கநாதான் அவர்கள் ஏற்றி வைத்ததை தொடர்ந்து சாரணிய கொடியை சாரணிய சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, சாரணிய சங்கத்தின் பெயர்ப்பலகையினை பருத்தித்துறை நகரபிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் திரை நீக்கம் செய்து வைத்தார். சங்க கட்டிடத்தினை வடமராட்சி கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் மோ.தெய்வேந்திரா நாடா வெட்டி சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்தார்.
அதனை தொடர்ந்து கருத்துரைகளை பருத்தித்துறை மாவட்ட தலைவரும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலருமான நடராசா திருலிங்கநாதன், வடமராட்சி கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் மோ.தெய்வேந்திரா ஆகியோர் வழங்கினர்.
இந் நிகழ்வில் பருத்தித்துறை சாரணிய சங்கத்தின் ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், சாரணர்கள், பருத்தித்துறை நகர பிதா விசன்ட் டீ போல் டக்ளஸ் போல், வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நடராசா திருலிங்கநாதன், உதவி பிரதேச செயலாளர் ப.தயானந்தன், பிரதேச செயலக கணக்காளர் ம. சிவகுமாரன், அதிபர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.












