வளைகுடாப் பகுதிக்கு மேலதிக படையினரை அனுப்புவதாக இங்கிலாந்து அறிவிப்பு!
ஈரானியத் தாக்குதல்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளுக்காக, மேலதிக பிரிட்டிஷ் வீரர்களும், அதிக இங்கிலாந்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்படவுள்ளன.
இதன்மூலம், வளைகுடா மற்றும் சைப்ரஸின் பாதுகாப்பில் ஈடுபடும் இங்கிலாந்து வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1,000 ஆக உயரும் என்று கூறப்படுகின்றது.
ஈரானிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்தக் கூடுதல் படைக் குவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டாருக்கு விஜயம் மேற்கொண்ட இங்கிலாந்தின் தேசியப் பாதுகாப்பு செயலாளர் ”ஜோன் ஹீலி” குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சவுதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு மேலதிக வான் பாதுகாப்புப் படைகளும், அமைப்புக்களும் அனுப்பப்படுவதோடு, கட்டாரின் டைஃபூன் ஜெட் விமானங்களின் பயன்பாடு நீட்டிக்கப்படும் என்றும் வளைகுடா நாடுகளுக்கான தனது பயணத்தின்போது பேசிய பாதுகாப்புச் செயலாளர் ”ஜோன் ஹீலி” குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் இங்கிலாந்து ஈடுபட மறுப்பது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பாசாங்கு செய்து வரும் நிலையில் ஜோன் ஹீலியின் இந்த அறிவிப்பு வெளி வந்துள்ளது.