2029ஆம் ஆண்டு தேர்தலில் பொது வேட்பாளர் யார்? – நாமல் எம்.பி. கருத்து.!
“அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளர் யார் என்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
“ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட எதிரணிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தால் 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்படாதா? அவ்வாறு எழும் பட்சத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும்.” – என்று நாமல் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர்,
“இது பற்றி 2029 ஆம் ஆண்டில் கதைப்போம். தற்போது விவாதிக்க வேண்டிய விடயம் அல்ல அது.
எதிரணிகள் ஒன்றிணைந்து வலுமான அரசியல் பயணத்தை முன்னெடுப்பது பற்றியே தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் ஒன்றிணைவதற்கு நாமல் எம்.பி. மீண்டும் வரவேற்பு தெரிவித்தார்.