உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

ஈரான் வன்முறையில் பொலிஸ்காரர் சுட்டுக் கொ*லை; இதுவரை பலி 36 ஆக அதிகரிப்பு.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
33 பார்வைகள்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவரை நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.மேற்காசிய நாடான ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது.

பணவீக்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. ஈரானில் அரசுக்கு எதிராக வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.கடந்த டிசம்பர் 28ம் தேதி தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாற தொடங்கியது. பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த வகையில், டெஹ்ரானில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

பாதுகாப்பு படையினர், போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. அப்போது போராட்டக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் காரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஈரான் போராட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 36 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இதில் 18 வயதுக்குட்பட்டவர்கள் 5 பேர் அடங்குவர். தொடர்ந்து பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்து வருவது அந்நாட்டு மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

36 0 0