உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

வங்கதேசத்தில் கும்பலால் துரத்தப்பட்ட ஹிந்து இளைஞர்; கால்வாயிலில் குதித்து உயிரிழப்பு.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
32 பார்வைகள்

வங்கதேசத்தில் தன்னை துரத்தி வந்த கும்பலிடமிருந்து தப்பிக்க முயன்ற 25 வயது ஹிந்து இளைஞர் கால்வாயில் குதித்து உயிரிழந்தார்.வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றதில் இருந்து அந்நாட்டில் ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, இத்தாக்குதல்கள் மிக கொடூரமாக மாறின. ஹிந்துக்கள் இளைஞர்கள் வன்முறை கும்பல்களால் அடித்தும், தீ வைத்து எரித்தும் கொல்லப்பட்டனர்.வங்கதேசத்தில் கடந்தாண்டு டிசம்பர் 2 முதல் 35 நாட்களில், நாடு முழுதும், 11 ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலைக்கான காரணங்கள் வெவ்வேறாக கூறப்பட்டாலும் அனைவரும் ஹிந்துக்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் நவோகான் மாவட்டத்தின் மகாதேப்பூர் பகுதியில் சோக சம்பவம் அரங்கேறி இருக்கிறது.தன்னை துரத்தி வந்த கும்பலிடமிருந்து தப்பிக்க முயன்ற 25 வயது ஹிந்து இளைஞர் கால்வாயில் குதித்து உயிரிழந்தார். இவர் பந்தர்பூர் கிராமத்தை சேர்ந்த மிதுன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

36 0 0