உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர பாரிஸில் மாநாடு.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
42 பார்வைகள்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தலைமையில் பாரிஸில் ‘விருப்பமுள்ளவர்களின் கூட்டணி’ (Coalition of the Willing) மாநாடு நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, போரை நிறுத்த முன்வைக்கப்பட்டுள்ள 20 அம்ச அமைதித் திட்டம் சுமார் 90% எட்டப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள 10% பகுதிகளில் உக்ரைன் தனது நிலப்பரப்புகளை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுப்பது தொடர்பான கடுமையான விவாதங்கள் நிலவுகின்றன.தற்போது ரஷ்யா டொன்பாஸ் பிராந்தியத்தின் பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், அங்கிருந்து பின்வாங்க மறுப்பது பெரும் சவாலாக உள்ளது.மறுபுறம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உக்ரைனுக்கு 15 ஆண்டுகாலப் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க முன்வந்துள்ளார்.

இந்தத் திட்டத்தின்படி, போர்நிறுத்தம் ஏற்பட்டால் அதனைப் பாதுகாக்கவும் கண்காணிக்கவும் சர்வதேச அமைதிப் படைகள் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது.இருப்பினும், ரஷ்யா உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவது அமைதி முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.மேலும், வெனிசுவேலாவில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை மற்றும் கிரீன்லாந்து விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சைகள் பாரிஸ் பேச்சுவார்த்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

உக்ரைன் தனது நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வலுவான பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஐரோப்பிய நாடுகளிடமிருந்து எதிர்பார்ப்பதுடன், இறுதி முடிவை மக்கள் வாக்கெடுப்பு மூலம் உறுதிப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

36 0 0