உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

வெனிசுவேலா விவகாரம் : கனடாவின் அதிரடி நடவடிக்கை.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
44 பார்வைகள்

அமெரிக்க சந்தையில் வெனிசுவேலாவின் எண்ணெய் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆசியாவிற்கான தனது எண்ணெய் சந்தையை விரிவுபடுத்தக் கனடா பணியாற்றி வருவதாகப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

பசுபிக் கடற்கரைக்கு செல்லும் எண்ணெய் குழாய் திட்டத்திற்குஉடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு பிரதமர் கார்னிக்கு எழுதிய கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பெய்ரே பொய்லிவ்ரே வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக பாரிஸில் தங்கியிருந்த கார்னியிடம், வெனிசுவேலாவின் எண்ணெய் துறையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்புவது தொடர்பாகவும், அதனால் பி.சி கடற்கரைக்கான குழாய் திட்டத்தின் அவசியம் குறித்தும் கேட்கப்பட்டது.ஆல்பர்ட்டா அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, புதிய எண்ணெய் குழாய் திட்டம் மற்றும் சந்தை விரிவாக்கம் ஆகியவற்றில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகப் பிரதமர் கார்னி பதிலளித்துள்ளார்.

வெனிசுவேலாவில் நடக்கும் நிகழ்வுகள், பசுபிக் கடற்கரைக்கான புதிய எண்ணெய் குழாய் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாகாண அரசு தயாராகி வருவதாகவும், மத்திய அரசாங்கம் இதில் அவசரமாகச் செயல்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 60 நாட்களுக்குள் அந்த திட்ட முன்மொழிவை அங்கீகரிக்க உறுதியளிக்குமாறு பழமைவாதிகள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக பொய்லிவ்ரே தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

36 0 0