உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

நேபாளத்தில் வெடித்த வன்முறை : இந்தியாவுடனான எல்லைகள் மூடல்.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
31 பார்வைகள்

நேபாளத்தின் தெற்குப் பகுதியில் சமூக வலைதள வீடியோ ஒன்றால் ஏற்பட்ட மத ரீதியான சர்ச்சை வன்முறையாக மாறியுள்ள நிலையில், இந்தியாவுடனான எல்லைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.

நேபாளத்தின் தனுஷா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்ட மதத்தினரை இழிவுபடுத்தும் கருத்துக்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அதற்குப் போட்டியாக ஒரு பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டதால் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இதன் எதிரொலியாக, பீகார் எல்லையை ஒட்டியுள்ள பீர்குஞ்ச் (Birgunj) நகரில் போராட்டக்காரர்கள் பொலிஸ் நிலையம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், அந்த நகரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவையும் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

இந்த வன்முறை அண்டை மாநிலமான பீகாருக்குள் பரவாமல் தடுக்க, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையான ராக்ஸால் எல்லையை முற்றிலுமாக மூடி முத்திரையிட்டுள்ளது.அவசர மருத்துவத் தேவைகளைத் தவிர மற்ற அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

36 0 0