உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

ஏராளமான கியூப மற்றும் வெனிசுவேலா வீரர்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய ட்ரம்ப்.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
30 பார்வைகள்

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைச் சிறைபிடிப்பதற்காக அமெரிக்காவின் எலைட் (Elite) படையினர் நடத்திய ராணுவ நடவடிக்கையில் ஏராளமான கியூப மற்றும் வெனிசுவேலா வீரர்கள் கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மதுரோவின் குடியிருப்பு மீது நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலில், கியூபாவைச் சேர்ந்த 32 பாதுகாப்புப் படையினரும், வெனிசுவேலாவைச் சேர்ந்த 23 வீரர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்தத் தாக்குதலை “மிகச்சிறப்பானது” என்று வர்ணித்துள்ள ட்ரம்ப், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதச் சதியை ஒடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கியூப அரசு தனது நாட்டு வீரர்கள் 32 பேர் கொல்லப்பட்டதை அதிகார பூர்வமாக அறிவித்து, இரண்டு நாட்கள் தேசியத் துக்கம் அனுஷ்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெனிசுவேலாவின் தலைநகர் காரகாஸின் வீதிகளில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதைய சூழலில் பாதுகாப்புப் படையினர் “எப்போதும் விசுவாசமாக இருப்போம், துரோகம் செய்ய மாட்டோம்” என்று முழக்கமிடும் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இருப்பினும், மதுரோவின் ஆதரவாளர்கள் இன்னும் அதிகாரப் பதவிகளில் நீடிப்பதால், மக்கள் மத்தியில் ஒருவிதமான அச்சமும் மிரட்டலும் நிலவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், கரீபியன் கடல் பகுதியில் கடந்த மாதம் அமெரிக்காவால் சோதனையிட முயற்சிக்கப்பட்ட ஒரு மசகு எண்ணெய் கப்பல் தற்போது ஐரோப்பாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

36 0 0