உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

கிரீன்லாந்தை அடைய முயற்சிக்கும் ட்ரம்ப்!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
49 பார்வைகள்

அமெரிக்கா கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது முற்றிலும் அர்த்தமற்றது என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென் என தெரிவித்துள்ளார்.வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென் கிரீன்லாந்து தொடர்பில் ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மெட்டே ஃப்ரெடெரிக்சென் (Mete Frederiksen) அறிக்கை ஒன்றில், “அமெரிக்கா கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்று பேசுவது முற்றிலும் அர்த்தமற்றது.

டேனிஷ் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் எதையும் இணைத்துக்கொள்ள அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை.வரலாற்று ரீதியாக நெருங்கிய நட்பு நாடான ஒரு நாட்டிற்கும், தாங்கள் விற்பனைக்கு அல்ல என்று மிகத் தெளிவாகக் கூறிய மற்றொரு நாட்டிற்கும், அதன் மக்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்களை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கடுமையாக வலியுறுத்துகிறேன்” என்றார்.

மேலும் அவர், “அமெரிக்க ஜனாதிபதி நமக்கு கிரீன்லாந்து தேவை என்று கூறி, எங்களை வெனிசுலா மற்றும் இராணுவத் தலையீட்டுடன் தொடர்புபடுத்தும்போது, அது தவறு மட்டுமல்ல; அது மரியாதையற்றது” என கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

36 0 0