உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

ட்ரம்பின் இரும்புக்கரத்தை உடைத்து தப்பிச்சென்ற வெனிசுலாவின் எண்ணெய் கப்பல்கள்.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
36 பார்வைகள்

வெனிசுலாவில் ட்ரம்பின் வலுவான கடற்படையின் கண்களில் மண்ணைத் தூவி டசினுக்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வெனிசுலாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளுடன் தப்பிச்சென்ற கப்பல்கள் அனைத்தும் கண்காணிக்கும் கருவிகள் எதையும் பயன்படுத்தாமல், பல ஆயிரம் மயில்களுக்கு அப்பால் காணப்படுவதுபோல் அமைப்புகளையும் திருத்தியுள்ளது.ம, அமெரிக்காவின் கடற்படை அணிவகுப்பை சாமர்த்தியமாக மீறியுள்ளது.

சமீபத்திய பல வாரங்களாக அந்தக் கப்பல்கள் அனைத்தும் வெனிசுலா துறைமுகங்களுக்கு அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.ஆனால், சனிக்கிழமை அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னர், இந்தக் கப்பல்கள் அனைத்தும் இரவோடு இரவாக தப்பியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் டிசம்பர் மாத நடுப்பகுதியில் வெனிசுலா மீது முற்றுகையை விதித்தார்.மேலும், மதுரோ பதவியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து, வெனிசுலா மீதான எண்ணெய் தடை முழு வீச்சில் அமுலில் இருந்து வருவதாக அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த நெருக்கடியான சூழலில், கப்பல்கள் அனைத்தும் துறைமுகத்தை விட்டுப் புறப்படும் அபாயகரமான முடிவை எடுத்துள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், குறைந்தது ஒரு டசின் கப்பல்களில் வெனிசுலாவின் 12 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் எண்ணெய் ஏற்றப்பட்டன.

அடையாளம் காணப்பட்ட 16 கப்பல்களில் பதினைந்து கப்பல்கள், ஈரானிய மற்றும் ரஷ்ய எண்ணெயைக் கொண்டு சென்றதற்காக அமெரிக்கத் தடைகளின் கீழ் குறிக்கப்பட்டுள்ளது.இதில் நான்கு கப்பல்கள் செயற்கைக்கோள் தரவுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது. எஞ்சிய 12 கப்பல்கள் தொடர்பில் தகவல் இல்லை.

வெனிசுலாவில் இருந்து எண்ணெய் கப்பல்கள் வெளியேறாமல் இருக்க அமெரிக்கா அமைத்துள்ள கடற்படை அரணை நவீன வரலாற்றிலேயே மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்று என அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ பெருமையாக குறிப்பிட்டிருந்தார்.ஆனால் தற்போது, அமெரிக்காவின் பாதுகாப்பு அரணை சாமர்த்தியமாக உடைத்து கப்பல்கள் அனைத்தும் வெனிசுலாவில் இருந்து வெளியேறியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

36 0 0