புத்தளம், தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய சோதனையின் போது இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்டன எனக் கூறப்படும் 5 உயர்வலு கொண்ட உந்துருளிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்ட 800 மற்றும் 400 எஞ்சின் திறன் கொண்ட நான்கு உந்துருளிகளும், எந்தவொரு சட்ட ஆவணங்களும் இல்லாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 எஞ்சின் திறன் கொண்ட ஒரு உந்துருளிகளும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 50, 45 மற்றும் 20, 22 வயதுடைய 4 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த உந்துருளிகள் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும், அவற்றில் சில உந்துருளிகள் இரவில் இரகசியமாக ஓட்டிச் செல்லப்பட்டன என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட உந்துருளிகளுடன் புத்தளம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.










