இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள கண்டி – கம்பளை பகுதியைச் சேர்ந்த முகம்மது கியாஸ் (43), மனைவி பாத்திமா பர்ஹானா (34) இவர்களின் குழந்தைகள் முகம்மது யஹ்யா (12), அலிஷா (4), அமிரா (4) ஆகிய 5 பேர் இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடற்பகுதியில் இன்று (ஜூன் 9) அதிகாலை சென்றடைந்தனர்.
இதுபற்றி தகவலறிந்த பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்த 5 பேரையும் மண்டபம் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அதற்கு முகம்மது கியாஸ் “இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது இங்கு பலரிடம் கடன் பெற்று திருப்பி கொடுக்க முடியாததால் வாழ வழியின்றி தமிழகத்துக்கு குடும்பத்தோடு அகதிகளாக வந்ததாக” தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு பின்னர், 5 அவர்கள் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.