• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா ராமேஸ்வரம் கடற்கரையில் மீட்பு; 6 பேர் கைது

Sangeetha by Sangeetha
June 8, 2025
in இந்திய செய்திகள், இலங்கை செய்திகள்., முக்கிய செய்திகள்
0
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா ராமேஸ்வரம் கடற்கரையில் மீட்பு; 6 பேர் கைது
Share on FacebookShare on Twitter

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் நேற்று சனிக்கிழமை(7) காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த .10 லட்சம் இந்திய மதிப்பிலான 50 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லை ஊடாக படகுகளில் இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், பீடி இலை பண்டல்கள், கடல் அட்டை, சமையல் மஞ்சள், திமிங்கலம் துடுப்பு, சுக்கு உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி செல்ல இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் வடிவேல் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய தனிப்பிரிவு போலீசார் குழுவாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சேராங்கோட்டை வரை கடற்கரை பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மீன்பிடி துறைமுகம் அருகே சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நின்று கொண்டிருந்ததை கண்ட தனிப்பிரிவு போலீசார் காரில் இருந்து ஒருவர் பெரிய பை ஒன்றை எடுத்து நாட்டுப்படகில் ஏற்றுவதற்காக கடற்கரைக்கு கொண்டு சென்றதையடுத்து போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்த போது காரில் மேலும் இருவர் இருந்தது தெரியவந்ததையடுத்து காரை சோதனை செய்த போது காரில் கஞ்சா மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் காரில் இருந்த மூவரை பிடித்து விசாரணைக்காக ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலையத்திற்கு தனிப்பிரிவு போலீசார் அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கஞ்சா மூட்டைகள் படகில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவித்ததுடன் அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த ஆறு நபர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ கஞ்சாவின் இந்திய மதிப்பு ரூ.10 லட்சம் என்றும், பிடிபட்ட கார் ரூ.5 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கடற்கரை பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கை ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் எச்சரித்துள்ளார்.

ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய்;  விசிக-வின் ஆதரவால் தவெக பெரும்பான்மை பெற்றது!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகிறார் விஜய்; விசிக-வின் ஆதரவால் தவெக பெரும்பான்மை பெற்றது!

by Bharathy
May 9, 2026
0

தமிழக முதல்வர் பதவியேற்பில் தொடர்ந்தும் இழுபறி நீடித்துவரும் நிலையில் அ தி முக உறுப்பினர்கள் சிலர் தமிழகவெற்றிக்கழகத்தின் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன்விடுதலை சிறுத்தைகள் கட்சியின நிபந்தனையற்ற...

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் இருவர் கைது.!

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது.!

by Mathavi
May 9, 2026
0

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு...

யாழ். போதனா வைத்தியசாலையின் எரிந்த பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில்.!

யாழ். போதனா வைத்தியசாலையின் எரிந்த பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில்.!

by Mathavi
May 9, 2026
0

யாழ். போதனா வைத்தியசாலையின் தீக்கிரையான மருந்துக் களஞ்சியப் பகுதி, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆய்வுகள் நிறைவடையும் வரை பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்...

உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு யாழில் மரநடுகை நிகழ்வு.!

உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு யாழில் மரநடுகை நிகழ்வு.!

by Mathavi
May 9, 2026
0

உலக செஞ்சிலுவை தினத்தை சிறப்பிக்கும் முகமாக, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளையினரால் இன்றைய தினம் விசேட மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்...

இது சதியா? தற்செயலா? – யாழ். வைத்தியசாலை தீ விபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!

இது சதியா? தற்செயலா? – யாழ். வைத்தியசாலை தீ விபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!

by Mathavi
May 9, 2026
0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் பல ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும்...

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணி தலைவராக ஊடகவியலாளர் லின்ரன் தெரிவு.!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணி தலைவராக ஊடகவியலாளர் லின்ரன் தெரிவு.!

by Mathavi
May 9, 2026
0

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணியின் புதிய நிர்வாகத் தெரிவு இன்று சனிக்கிழமை (09) காலை 10:30 மணியளவில் யாழ் கிளைத் தலைமைச் செயலகத்தில்...

வாக்குமூலம் கேட்டு கபில மீது சித்திரவதை.!

வாக்குமூலம் கேட்டு கபில மீது சித்திரவதை.!

by Mathavi
May 9, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு வாக்குமூலம் அளிக்குமாறு கபில சந்திரசேனவுக்குப் பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர்...

முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கடும் சந்தேகம்.!

முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கடும் சந்தேகம்.!

by Mathavi
May 9, 2026
0

அரச திறைசேரி நிதி மோசடி மற்றும் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து அரசு உடனடி மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை...

இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!

இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!

by Mathavi
May 9, 2026
0

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை இந்திர விழாவின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட 6 உணவு நிலைய உரிமையாளர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அறுவருக்கு ஒரு இலட்சத்து...

முல்லைத்தீவில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள்.!

முல்லைத்தீவில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள்.!

by Mathavi
May 9, 2026
0

சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள் முல்லைத்தீவில் இடம்பெற்றது. முல்லை மாவட்டத்தின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈரான், ரஷ்யா, அமெரிக்கா...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி