இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தில் பாடசாலை மாணவியை கொ*லை செய்த குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் கைது செய்யப்பட்டவர் குற்றவாளி என அறிவித்தநிலையில், இரட்டை தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
சுமார் 1000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இந்த வழக்கில் 30 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் உடலில் நகக்கீறல்கள் இருந்த நிலையில் மாணவியின் நகங்களில் சதைத்துணுக்குகள் இருந்தன.
அந்த சதைத்துணுக்குகளின் மரபணு சோதனைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குற்றவாளிக்கு நீதிமன்றம் இரட்டை தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.










