உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மதியம் முடிவடைந்ததை அடுத்து வேட்புமனுக்களை சரி பார்க்கும் பணி மாவட்ட தேர்தல் செயலகங்களில் நடைபெற்று வருகின்றது.
அதனடிப்படையில் சில கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தாக்கல் செய்திருந்த அனைத்து வேட்புமனுக்களும் நிராகரிக்கப்ட்டுள்ளது. அத்துடன் அர்ச்சுனா எம்.பி தலமையிலான குழுவினர் தாக்கல் செய்த அனைத்து வேட்புமனுக்களும் நிராகரிக்கப்ட்டுள்ளது
குறித்த வேட்புமனுத்தாக்கல் நிராகரிக்கப்ட்டதற்கான காரணம் உடன்பாடில்லை என்பதுடன் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறித்த கட்சியினர் அறிவித்துள்ளனர்.
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை வியாழக்கிழமை (20) கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.