நெல் களஞ்சியசாலை உரிமையாளர்கள் மற்றும் அரைக்கும் ஆலை உரிமையாளர்கள் அனைவரும் தமது பதிவினை விரைவாக நெல் சந்தைப்படுத்தல் சபையினரிடம் மேற்கொள்ள வேண்டும் என நெல் சந்தைப்படுத்தல் சபையினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பதிவு செய்யப்படாதவர்களுக்காக தற்பொழுது ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நெல் களஞ்சிய சாலைகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தமது பதிவினை விரைவாக மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்பொழுது வழங்கப்பட்டுள்ள ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யப்படாத அனைத்து நெல் களஞ்சியசாலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நெல் சந்தைப்படுத்தல் சபை (கஜன்)
0770777724