ஒருவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதன் அர்த்தத்தை அவரது இறுதி நிகழ்வில் தெரியும். அதற்கு எடுத்துக்காட்டாக மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இழப்பு சுட்டி நிற்கின்றது என மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதியை ஊடகப் புலத்துடன் அரசியல் புலமும் நினைவு கூர்ந்து அஞ்சலித்துள்ளது.
உடல் நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த அமரர் இராஜநாகம் பாரதி கடந்த 9 ஆம் திகதி தனது 62 ஆவது வயதில் காலமானார்.
இந்நிலையில் தமிழ் ஊடகத்துறையின் மூத்து ஊடவியலாளர் பாரதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் (13) அன்னாரின் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வருகிறது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச ஊடக துறைசார் தோழர்கள், அரசியல் தலைவர்கள், சமூக செயற்பட்டாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து தமது அஞ்சலிகளை செலுத்தியிருந்ததுடன் அஞ்சலி உரைகளையும் நிகழ்த்தி பாரதியின் அழிக்கப்பட முடியாத வரலாற்று தடங்களை எடுத்துக் கூறி தமது உணர்வுகளை வெளிப்படுத்தி அமரர் பாரதிக்கு இறுதி விடை கொடுப்பதற்கு ஆயத்தமாகிறார்கள்.









