• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள் தேவை

admin by admin
September 9, 2024
in உலக செய்திகள், விளையாட்டுச் செய்திகள்
0
இலங்கையின் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள் தேவை
Share on FacebookShare on Twitter

லண்டன் கெனிங்டன் கியா ஓவல் விளையாட்டரங்கில் 26 வருடங்களின் பின்னர் மீண்டும் வெற்றிபெறும் முனைப்புடன் 219 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை, 3ஆம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் நிறுத்தப்பட்டபோது ஒரு விக்கெட்டை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கையின் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதம் இருக்க அதன் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

போட்டியில் மேலும் 2 நாட்கள் மீதம் இருப்பதால் இலங்கை அணி அவசரப்படாமல் ஆறஅமர துடுப்பெடுத்தாடி வெற்றி இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும்.

திமுத் கருணாரட்ன (8) துரதிர்ஷ்டவமாக கிறிஸ் வோக்ஸின் பந்து வீச்சில் பட் – பேட் (bat – pad) மூலம் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

முதல் இன்னிங்ஸில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்த பெத்தும் நிஸ்ஸன்க இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைச் சதம் குவித்து 53 ஓட்டங்களுடன் ஆட்டம்  இழக்காதுள்ளார். 44 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டறிகளை அடித்துள்ளார். மறுபக்கத்தில் குசல் மெண்டிஸ் 6 பவுண்டறிகள் உட்பட 30 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இன்று காலை விக்கெட் காப்பில் ஈடுபட்டிருந்த தினேஷ் சந்திமால், 18ஆவது ஓவரில் லஹிரு குமார வீசிய பந்து இடப்புறமாக எகிறிச்சென்றபோது உயரே தாவி தார். ஆனால் பந்தைப் பிடித்த பின்னர்  நிலத்தில் வீழ்ந்து அடிபட்டதால் தினேஷ் சந்திமால் கடும் வலியால் அவதியுற்றார்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு பதில் வீரர்கள் அவரை தாங்கலாக மைதானத்தை விட்டு அழைத்துச் சென்றனர். வீரர்கள் தங்குமறைக்கு அவர் ஒவ்வொரு படியாக தட்டுத்தடுமாறி ஏறிச்சென்றார். 18ஆவது ஓவரிலிருந்து அவருக்குப் பதிலாக நிஷான் மதுஷ்க விக்கெட் காப்பாளராக செயற்பட்டார்.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை எஞ்சிய 5 விக்கெட்களை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 265 ஓட்டங்களாக இருந்தது.

தனஞ்சய டி சில்வா 64 ஓட்டங்களிலிருந்தும் கமிந்து மெண்டிஸ் 54 ஓட்டங்களிலிருந்தும் தங்களது துடுப்பாட்டங்களைத் தொடர்ந்தனர்.

அவர்கள் இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை பலமான நிலையில் இடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கையின் கடைசி 5 விக்கெட்கள் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

மொத்த எண்ணிக்கை 220 ஓட்டங்களாக இருந்தபோது தனஞ்சய டி சில்வா 69 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து கமிந்து மெண்டிஸ் 64 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

பின்வரிசையில் அசித்த பெரனாண்டோ (11) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்;

பந்துவீச்சில் ஒல்லி ஸ்டோன் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொஷ் ஹல் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றத்திற்கு மத்தியில் சகல விக்கெட்களையும் இழந்து 156  ஓட்டங்களைப்  பெற்றது.

இந்தத் தொடரில் இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் சரிவு கண்டது இதுவே முதல் தடவையாகும்.

டான் லொரன்ஸ் 35 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித் 67 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து 7 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

அப்போது ஜெமி ஸ்மித் 31 பந்துகளில் 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அடுத்த 6 பந்துகளில் 20 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன் 43 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்திசெய்தார்.

இறுதியில் 50 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 67 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவர் கடைசி 19 பந்துகளில் 52 ஓட்டங்களைக் குவித்தமை இங்கிலாந்துக்கு சற்று தெம்பைக் கொடுப்பதாக அமைந்தது.

லோரன்ஸ், ஸ்மித் ஆகியோரைவிட ஜோ ரூட் (12), ஒல்லி ஸ்டோன் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் லஹிரு குமார 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 43 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 325 ஓட்டங்களையும் இலங்கை 263 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.

Related Posts

சீனாவில் கனமழை – 21 பேர் உயிரிழப்பு!

சீனாவில் கனமழை – 21 பேர் உயிரிழப்பு!

by selvan
May 21, 2026
0

சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பெய்துவரும் மிகக் கடுமையான கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்குக் காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும்...

8000 பேர் பணி நீக்கம் – மெட்டா அதிரடி!

8000 பேர் பணி நீக்கம் – மெட்டா அதிரடி!

by selvan
May 21, 2026
0

மெட்டா நிறுவனம் உலக அளவில் ஏறத்தாழ 8,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான...

ஆப்கானிஸ்தானில் பசியின் கொடுமையால் குழந்தைகளை விற்கும் அவலம்!

ஆப்கானிஸ்தானில் பசியின் கொடுமையால் குழந்தைகளை விற்கும் அவலம்!

by selvan
May 21, 2026
0

ஆப்கானிஸ்தானில் நிலவும் கடுமையான வேலையின்மை, வறட்சி மற்றும் சர்வதேச உதவிகள் முடக்கப்பட்டமை காரணமாக, நாட்டின் பெரும்பாலான மக்கள் பட்டிணியால் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் ஒருவேளை உணவிற்காகத் தங்களது சொந்தக் குழந்தைகளையே...

ஹோர்முஸ் நீரிணை வழியாக 26 வணிக கப்பல்கள் பயணம்.

ஹோர்முஸ் நீரிணை வழியாக 26 வணிக கப்பல்கள் பயணம்.

by selvan
May 21, 2026
0

கடந்த 24 மணித்தியாலங்களில்  26 வணிகக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதற்கு தாம் ஒருங்கிணைப்பு செய்துள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.ஈரானின் அதிகாரப்பூர்வ ISNA செய்தி நிறுவனம்...

பாகிஸ்தனுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது பங்களாதேஷ் அணி!

பாகிஸ்தனுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது பங்களாதேஷ் அணி!

by selvan
May 21, 2026
0

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை  78 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தி இரண்டாவது டெஸ்ட் தொடரையும் பங்களாதேஷ் அணி கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இரண்டு போட்டிகள் கொண்ட...

காசா உதவிக் கப்பல் ஆர்வலர்களைத் துன்புறுத்திய இஸ்ரேலிய அமைச்சர்: அமெரிக்கா கண்டனம்!

by selvan
May 21, 2026
0

காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல் குழுவிலிருந்த  வெளிநாட்டு ஆர்வலர்களை, இஸ்ரேல் கைது செய்துள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்படுள்ள ஆர்வலர்களை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய...

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமையானது உலகளாவிய உணவு நெருக்கடியைத் தூண்டும்: ஐநா எச்சரிக்கை

by selvan
May 21, 2026
0

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமையானது உலகளாவிய விவசாய உணவு அமைப்பில் கடுமையான கட்டமைப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

by Mathavi
May 20, 2026
0

ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தெற்குத் தீவுகளில் இன்று (20) 5.9 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தைத்...

அமெரிக்காவில் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு; மூவர் உயிரிழப்பு.!

அமெரிக்காவில் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு; மூவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 19, 2026
0

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சாண்டியாகோ நகரில் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி இன்று (19) காலை வழமைப் போல் பள்ளிவாசலில்...

அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து.!

அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து.!

by Mathavi
May 18, 2026
0

அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் நடைபெற்ற வான் சாகசக் கண்காட்சியின்போது அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி