பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது டெஸ்ட் தொடரையும் பங்களாதேஷ் அணி கைப்பற்றி உள்ளது.
இந்த வெற்றியின் மூலமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை பங்களாஷே் அணியானது 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலமாக பங்களாதேஷ் அணி தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் மற்றொரு மறக்க முடியாத அத்தியாயத்தைப் பதிவு செய்துள்ளது.
இது டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானின் வளர்ந்து வரும் வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியானது முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்களை எடுத்தது.
அதன் பின்னர், தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்து ஆடிய பாகிஸ்தான் 232 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
46 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 390 ஓட்டங்களை எடுத்தது.
அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் 137 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 69 ஓட்டங்களையும் மற்றும் மஹ்முதுல் ஹசன் ஜோய் 52 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.
இதனால், வெற்றி இலக்கு 437 ஆக நிர்ணயிக்கப்பட்ட, அதனைை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 358 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
மொஹமட் ரிஸ்வான் 94 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஷான் மசூத் 71 ஓட்டங்களையும் அதிபடியாக எடுத்தனர்.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் தைஜுல் இஸ்லாம் அதிகபடியாக ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக முஷ்பிகுர் ரஹீம் தெரிவானதுடன், தொடரின் ஆட்டநாயகனாக லிட்டன் தாஸ் தெரிவானார்.
பங்களாதேஷின் இந்த வெற்றியானது, 58.33 சதவீத விகிதத்துடன் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி, நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் பங்களாதேஸ் ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றியது.
தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அடுத்த கட்டமாக, பங்களாதேஷ் இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்காக அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்யும்.
மேலும், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளர்களுக்கு எதிராக அதே எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அவர்கள் தென்னாப்பிரிக்காவுக்கும் பயணம் செய்வார்கள்.










