• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home Uncategorized

தாய்நிலம் விடிவுறும் நாளே, தமிழரின் சுதந்திர நாள்! – பல்கலை மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு. !

Thinakaran by Thinakaran
February 4, 2024
in Uncategorized, இலங்கை செய்திகள்., கிளிநொச்சி செய்திகள், மட்டக்களப்பு செய்திகள்
0
Share on FacebookShare on Twitter

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும், தமிழ் மக்களுமாக இன்று பேரெழுச்சியாக நாம் ஒன்று திரண்டிருக்கின்றோம்.

ஈழத் தமிழர்களாகிய நாம் மரபு வழித் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்கு பிரகடனப்படுத்துகின்றோம். வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு கோட்பாடு, பொங்கு தமிழ் பிரகடனம் என்பவற்றின் ஊடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாக பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்காக மீண்டும் ஒரு தடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக்கூற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இன்று பேரெழுச்சியாக நமது தாயகத்தின் மட்டக்களப்பிலும், கிளிநொச்சியிலும் ஒன்று திரண்டு நிற்கின்றோம்.

தமிழ், சிங்கள தனித்தனி அரசுகளைக் கொண்டிருந்த இலங்கைத் தீவு காலனித்துவ ஆட்சியாளர்களின் நிர்வாகத் தேவையின் நிமித்தம் இணைக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை முதலில் சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வரலாற்று நிகழ்வுகளை முற்றாக புறந்தள்ளி எண்ணிக்கையில் பெரும்பான்மை அடிப்படையில் முழு நாட்டினதும் அதிகாரங்கள் சிங்கள தேசத்திடம் கையளிக்கப்பட்டமை என்பது ஈழத்தமிழினம் மீது தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைகளிற்கே வழிகோலியது என்பதோடு, சிறிலங்கா அரசு தமிழ் மக்களிடையே எழும் போராட்டங்கள் மற்றும் உரிமைக்கான குரல்களை இராணுவ பலம் கொண்டு நசுக்குவதிலும், சிங்கள வன்முறைக் கும்பல்களின் வெறியாட்டத்திற்கு அனுமதிப்பத்திரம் அளிப்பதிலுமே நம்பிக்கை கொண்டிருக்கின்றது.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனியான சுதந்திர தமிழின அரசை அமைப்பற்கான வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு 1977 ஆம் ஆண்டு மக்கள் மகத்தான ஆணையை வழங்கி தங்கள் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தியிருந்ததோடு, 1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையில் தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டமையும் தீர்வுக்கான வழிகளில் முன்னேற்றம் காணப்படாமையின் விளைவாகவே தமிழரிடம் ஆயுதப் போராட்டம் கருக்கொண்டது என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

கடந்த 75 ஆண்டுகளிற்கு மேலாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களின் துணையோடு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற கட்டமைக்கப்பட்ட படுகொலைகள் 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அதியுயர் இனவழிப்பு படுகொலைகள் உட்பட மனிதப் படுகொலைகள், நிலங்களை கையகப்படுத்துதல், பாலியல் வன்முறைகள், பண்பாட்டு மற்றும் பொருளாதார கட்டுமானங்களை அழித்தல் போன்ற வன்முறைகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசத்துக்கான தகுதிப்பாட்டை தாங்கிநிற்கும் அனைத்து விழுமியங்களும் அழித்தொழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களிற்கான தீர்வு முயற்சிகள் யாவும் திம்புக் கோட்பாட்டினை அடியொற்றியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் பதின்மூன்றாம் (13ஆம்) திருத்தத்தினுள் முடக்க எத்தனிக்கும் அனைத்து முயற்சிகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழர்களை ஒரு தனித்த தேசமாக அவர்களின் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது மட்டுமே மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்கு முறைகளும் மீள நிகழாது இருப்பதை உறுதி செய்யும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பின்வரும், தமிழ் மக்களின் சமகால அடிப்படைச் சிங்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.

1. எமது உறவுகளைத் தேடும் உரிமை, கருத்துரிமை, பேச்சு உரிமை, வளங்களை அனுபவிக்கும் உரிமை, நீதி கோரும் உரிமை என்பன பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ் நிலை பாதுகாப்பு சட்டம் மற்றும் நிறைவேற்ற முன்மொழியப்பட்டுள்ள ஏனைய சட்டங்களால் மறுக்கப்படுகின்றது. ஆகவே இச்சட்டங்கள் மீளப்பெறப்பட வேண்டும்.

2. தொல்பொருட்த் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம். வனவள பாதுகாப்பு திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் திணைக்களம் என்னும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உரியவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும்.

3. தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாட்டை சிதைக்கும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து சிங்கள குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும்.

4. விடுவிக்கப்படாது எஞ்சியுள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான அனைத்துலக விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன் அவர்களுக்கு அனைத்துலக நீதி வழங்கப்படுவதோடு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

6. வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் இளையோர்கள் கூட்டாக சிந்திப்பதைத் தடுத்து உளவியல் ரீதியாக சிதறடிக்கும் நோக்கம் கொண்டு அரச படைகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் விநியோகம் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

7. பிராந்திய பண்பாட்டுப் பல்கலைக்கழகங்களாக விளங்கும் எமது யாழ்ப்பாண, கிழக்கு, வவுனியாப் பல்கலைக்கழகங்கள் பிராந்தியம் சார் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களை மையமாகக் கொண்டு செயற்படுதலையும் தமிழ் மாணவர்களின் கல்வி மற்றும் கல்வி சாரா செயற்பாடுகளில் அவர்களது வாய்ப்புகளின் இருத்தலையும் உறுதி செய்ய வேண்டும்.

8. மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள், திட்டமிட்ட இன அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள் மற்றும் மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

9. தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தப்படும் அனைத்து வகையான அச்சுறுத்தல்கள், தடைகளை முடிவுக்கு கொண்டு வரவும் நினைவு கூரும் உரிமையை உறுதி செய்யுமாறும் வேண்டுகின்றோம்.

10. கால காலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி பொறிமுறை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (ICC) அனைத்துலக நீதிமன்றம் (ICJ) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையில் சிறப்பாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் பொறிமுறைகளும் அனுமதிக்கப்பட வேண்டும்.

11. தமிழினப் படுகொலையை நிகழ்த்தி தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தொடர்ந்தும் உரிமை மீறல்கள், சமூக விரோதச் செயல்களுக்கு பாதுகாப்பாக உள்ள இராணுவத்தினரை தமிழர் தாயகத்திலிருந்து அப்புறப்படுத்துவதுடன், மக்களின் செயற்பாடுகளில் தலையிடுவதையும் முற்றாக நிறுத்த வேண்டும்.

இலங்கையில் நிலையான அமைதி ஏற்படுவதற்கு ஈழத்தமிழரின் தேசிய இன பிரச்சனையில் மரபு வழி தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் அனைத்துலக சமூகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணை பெறப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து எம்மை நாமே ஆழக்கூடிய நிரந்தர தீர்வும் பொது வாக்கெடுப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை தமிழ் மக்கள் சார்பாக இந்த பிரகடனத்தின் ஊடாக உலகுக்கு அறிவிக்கின்றோம் – என்றுள்ளது.

Tags: அதிகரித்தது!இலங்கைஏனையவைஒன்றியம்கிளிநொச்சிசுதந்திரசெய்திகள்தமிழரின்தாய்நிலம்தெரிவிப்பு!நாளே,நாள்பல்கலைமட்டக்களப்புமாணவர்விடிவுறும்

Related Posts

காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
May 25, 2026
0

திருகோணமலையில் இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஹேரத் ஹமிகே...

என் ஆட்சி நீடித்திருந்தால் டொலரின் மதிப்பு மேலும் குறைந்திருக்கும்.!

என் ஆட்சி நீடித்திருந்தால் டொலரின் மதிப்பு மேலும் குறைந்திருக்கும்.!

by Mathavi
May 25, 2026
0

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தான் நாட்டைப் பொறுப்பேற்ற போது இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது உண்மைதான் என்றும், எனினும் தாம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து...

யாழில் சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு.!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொ*லை வழக்கு குற்றவாளி உயிர்மாய்ப்பு.!

by Mathavi
May 25, 2026
0

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை கைதி ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த...

தலைக்கனத்தை விடுத்து அடுத்த கட்ட ஐ.எம்.எஃப் இணக்கப்பாட்டுக்குச் செல்லுங்கள்- சஜித் வலியுறுத்தல்

தலைக்கனத்தை விடுத்து அடுத்த கட்ட ஐ.எம்.எஃப் இணக்கப்பாட்டுக்குச் செல்லுங்கள்- சஜித் வலியுறுத்தல்

by selvan
May 25, 2026
0

இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதால், தற்போதைய அரசு தனது தலைக்கனத்தைக் கைவிட்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த கட்ட இணக்கப்பாட்டை நோக்கி நகர...

அரசின் இயலாமையால் சகல துறைகளும் முடக்கம் – நாமல் சாடல்!

by selvan
May 25, 2026
0

பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் வேகமாக உருகி மறைந்து வருகின்றன என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

ஆசிரியர் சேவை வெள்ளிவிழா: சிகரம் நிறுவன ஆலோசகர் திருமதி வில்வராசா உதயஸ்ரீ பாராட்டி கௌரவிப்பு.!

ஆசிரியர் சேவை வெள்ளிவிழா: சிகரம் நிறுவன ஆலோசகர் திருமதி வில்வராசா உதயஸ்ரீ பாராட்டி கௌரவிப்பு.!

by Mathavi
May 24, 2026
0

சிகரம் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும், கைவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியையுமான திருமதி வில்வராசா உதயஸ்ரீ அவர்களின் 25 வருட ஆசிரியர் சேவை வெள்ளிவிழா பாராட்டு...

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் எனும் போர்வையில் சுயநலம் பேணும் தலைவர்களிடம் ஏமாறாதீர்கள்.!

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் எனும் போர்வையில் சுயநலம் பேணும் தலைவர்களிடம் ஏமாறாதீர்கள்.!

by Mathavi
May 24, 2026
0

கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய அரசியல் என்ற போர்வையில் மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து, வாக்குகளைப் பெற்றுத் தங்களது சுயநல அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட ஏமாற்று அரசியல்வாதிகளின்...

யாழில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.!

யாழில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.!

by Mathavi
May 24, 2026
0

யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் உயிரிழந்துள்ளது. வரணி - இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவகுமார் பஸ்மிலன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது....

முல்லைத்தீவில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்.!

முல்லைத்தீவில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்.!

by Mathavi
May 24, 2026
0

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வெளி மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடக்கு...

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொ*லை செய்ய உதவிய இருவர் கைது.!

by Mathavi
May 24, 2026
0

துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினர் நேற்று (23) கைது...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி