• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தலைக்கனத்தை விடுத்து அடுத்த கட்ட ஐ.எம்.எஃப் இணக்கப்பாட்டுக்குச் செல்லுங்கள்- சஜித் வலியுறுத்தல்

selvan by selvan
May 25, 2026
in இலங்கை செய்திகள்.
0
தலைக்கனத்தை விடுத்து அடுத்த கட்ட ஐ.எம்.எஃப் இணக்கப்பாட்டுக்குச் செல்லுங்கள்- சஜித் வலியுறுத்தல்
Share on FacebookShare on Twitter

இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதால், தற்போதைய அரசு தனது தலைக்கனத்தைக் கைவிட்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த கட்ட இணக்கப்பாட்டை நோக்கி நகர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆசிரியர் சங்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் நேற்றைய தினம்  கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் நாட்டின் பொருளாதாரத் தரவுகளை முன்வைத்து இவ்வாறான எச்சரிக்கையை விடுத்தார்.

நாட்டில் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை எனக் காட்டுவதற்காக ஜனாதிபதி நாடு முழுவதும் சுற்றித் திரிந்து போதிய டொலர் கையிருப்பு இருப்பதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்றும் சஜித் பிரேமதாஸ சாடினார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

“அரசு கூறும் 7 பில்லியன் டொலர் கையிருப்பில், பயன்படுத்த முடியாத சீன யுவான் நாணயம் காணப்படுகிறது.

இதனால், உண்மையான கையிருப்பு அதைவிடக் குறைவாகவே உள்ளது.

சர்வதேசப் பொருளாதாரக் கொள்கைகளின்படி, ஒரு நாட்டின் கையிருப்பு குறைந்தபட்சம் 3 மாத இறக்குமதிச் செலவை ஈடுகட்ட வேண்டும்.

இலங்கையின் மாதாந்த இறக்குமதிச் செலவு 2 பில்லியன் டொலராக உள்ள நிலையில், தற்போதைய இருப்பைக் கொண்டு 3 மாத இறக்குமதியைக்கூடச் சமாளிக்க முடியாது.

இந்த யதார்த்தத்தை மறைத்து அரசு மக்களை ஏமாற்றுகின்றது.

தற்போது நாட்டுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு அனுப்பீடுகள் 8 பில்லியன் டொலராக அதிகரித்திருந்தாலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடிக்கும் போர்ச் சூழல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

அங்கு பொருளாதாரம் சரிந்தால் எமது தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை இழப்பார்கள்.

இது குறித்து அரசு இன்னும் வாய் திறக்கவில்லை.

மேலும், கடந்த 2022 காலப்பகுதியில் இலங்கைக்குப் பெருமளவில் உதவிய இந்தியா போன்ற அண்டை நாடுகளும் தற்போது தத்தமது உள்நாட்டுப் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால், தற்போது உதவிகளைப் பெறுவது எளிதல்ல.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

2022 இல் நாடு வங்குரோத்தடைந்த போது 470 ரூபாவாக இருந்த 92 ரக பெற்றோல், தற்போது 410 ரூபாவாக மட்டுமே குறைந்துள்ளது.

இதன் மூலம் யதார்த்த நிலைமையை விளங்கிக்கொள்ளலாம்.

தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு 2027 மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது.

இதனால் நாட்டின் கடன் தரவரிசைகள் மீண்டும் பாதிக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து 2028 ஆம் ஆண்டாகும்போது, மாதாந்த இறக்குமதிச் செலவுகளுக்கு மேலதிகமாக, ஆண்டுதோறும் திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை 2.5 பில்லியன் டொலரிலிருந்து 3.5 பில்லியன் டொலர் வரை பாரியளவில் அதிகரிக்கும்.

உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.

எனவேதான், சர்வதேச நாணய நிதியத்துடனான தொடர்ச்சியான இணக்கப்பாட்டுக்கு’ அரசு செல்ல வேண்டும் என நான் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தினேன்.

அண்மையில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ புயல் அனர்த்தத்தின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டுமாறு நான் விடுத்த கோரிக்கையை அரசு நிராகரித்திருந்தது.

அனர்த்த வேளையில் சர்வதேச மாநாட்டைக் கூட்டுமாறு நான் கோரியபோது, இந்தத் தலைக்கனம் பிடித்த அரசு ‘பிளீஸ் வேண்டாம்’ என்று கூறி அந்தப் பாரிய வாய்ப்பைக் குழிதோண்டிப் புதைத்தது.

இப்போதாவது அந்த வெட்கக்கேடான அரசியலை நிறுத்திவிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் அடிமையாக இல்லாமல், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளின்படி மக்கள் நலன் சார்ந்த அடுத்த கட்ட இணக்கப்பாட்டை எட்ட அரசு முன்வர வேண்டும்.

பொய்யான மாய பிம்பங்களை விடுத்து, சவால்களை எதிர்கொள்ளத் தேவையான டொலர்களை நாட்டுக்குக் கொண்டுவரும் முறையான திட்டங்களை நோக்கி அரசு உடனடியாக நகர வேண்டும்.”  என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் கேட்டுக்கொண்டார்.

Related Posts

காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
May 25, 2026
0

திருகோணமலையில் இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஹேரத் ஹமிகே...

என் ஆட்சி நீடித்திருந்தால் டொலரின் மதிப்பு மேலும் குறைந்திருக்கும்.!

என் ஆட்சி நீடித்திருந்தால் டொலரின் மதிப்பு மேலும் குறைந்திருக்கும்.!

by Mathavi
May 25, 2026
0

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தான் நாட்டைப் பொறுப்பேற்ற போது இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது உண்மைதான் என்றும், எனினும் தாம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து...

யாழில் சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு.!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொ*லை வழக்கு குற்றவாளி உயிர்மாய்ப்பு.!

by Mathavi
May 25, 2026
0

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை கைதி ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த...

அரசின் இயலாமையால் சகல துறைகளும் முடக்கம் – நாமல் சாடல்!

by selvan
May 25, 2026
0

பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் வேகமாக உருகி மறைந்து வருகின்றன என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

ஆசிரியர் சேவை வெள்ளிவிழா: சிகரம் நிறுவன ஆலோசகர் திருமதி வில்வராசா உதயஸ்ரீ பாராட்டி கௌரவிப்பு.!

ஆசிரியர் சேவை வெள்ளிவிழா: சிகரம் நிறுவன ஆலோசகர் திருமதி வில்வராசா உதயஸ்ரீ பாராட்டி கௌரவிப்பு.!

by Mathavi
May 24, 2026
0

சிகரம் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும், கைவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியையுமான திருமதி வில்வராசா உதயஸ்ரீ அவர்களின் 25 வருட ஆசிரியர் சேவை வெள்ளிவிழா பாராட்டு...

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் எனும் போர்வையில் சுயநலம் பேணும் தலைவர்களிடம் ஏமாறாதீர்கள்.!

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் எனும் போர்வையில் சுயநலம் பேணும் தலைவர்களிடம் ஏமாறாதீர்கள்.!

by Mathavi
May 24, 2026
0

கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய அரசியல் என்ற போர்வையில் மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து, வாக்குகளைப் பெற்றுத் தங்களது சுயநல அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட ஏமாற்று அரசியல்வாதிகளின்...

யாழில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.!

யாழில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.!

by Mathavi
May 24, 2026
0

யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் உயிரிழந்துள்ளது. வரணி - இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவகுமார் பஸ்மிலன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது....

முல்லைத்தீவில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்.!

முல்லைத்தீவில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்.!

by Mathavi
May 24, 2026
0

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வெளி மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடக்கு...

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொ*லை செய்ய உதவிய இருவர் கைது.!

by Mathavi
May 24, 2026
0

துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினர் நேற்று (23) கைது...

சரத் பொன்சேகா கூறியுள்ள விசித்திரமான கருத்துக்கள் தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது.!

சரத் பொன்சேகா கூறியுள்ள விசித்திரமான கருத்துக்கள் தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது.!

by Mathavi
May 24, 2026
0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் மற்றும் அது புதைக்கப்பட்ட இடம் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி