யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் – சங்கானை இடையே வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வீதிகளில் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நேற்றுமுன்தினம் முச்சக்கரவண்டியில் பயணித்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரை வழிமறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைத் தாக்கி விட்டு சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.
அண்மைய நாள்களில் பெண் ஒருவர் உட்படப் பலரிடம் அந்தப் பகுதியில் வழிப்பறிக் கொள்ளை நடந்துள்ளது என்று பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும், பொலிஸாரின் நடவடிக்கை திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களால் வீதிகளில் நடமாடவே அச்சப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள மக்கள், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Related Posts
தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்....
சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!
நெல்லியடி - பருத்தித்துறை பிரதான வீதியில், ரூபின்ஸ் வைத்தியசாலைக்கு அருகில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக...
சத்திர சிகிச்சைக்கு உதவி கோரும் முன்னாள் போராளிகளை கொச்சைப்படுத்தாதீர்கள்.!
"சத்திர சிகிச்சைக்காக உதவி கோரும் முன்னாள் போராளிகளுக்கு உங்களால் உதவ முடியாவிட்டாலும், தயவுசெய்து அவர்களைக் கொச்சைப்படுத்தி உபத்திரம் செய்யாதீர்கள்" என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய...
சமூக ஊடகத் தகவல்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்.!
"சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களின் உண்மைத்தன்மையையும், அதன் பின்னணியையும் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே அவற்றுக்கு விருப்பம் தெரிவிக்கவோ அல்லது பகிரவோ வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும்...
வடமராட்சி கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களைத் தேட உலங்கு வானூர்தி அனுப்பப்படும்.!
யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன நான்கு மீனவர்களையும் தேடும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்,...
வலிகாமம் வடக்கில் கறுப்புக்கொடிகளுடன் மக்கள் போராட்டம்!
யாழ். வலிகாமம் வடக்கு பகுதிகளில் இன்னும் விடுவிக்கப்படாது உயர் பாதுகாப்பு வலயமாக வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ"...
யாழில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும்.!
போதைப்பொருள் மற்றும் புகையிலைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் இன்றையதினம் சங்கானையில் இடம்பெற்றது. ஆரம்பத்தில், போதை மற்றும் புகையிலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக துண்டுப்...
வடமராட்சி கடலில் மாயமான மீனவர்கள்; தேடுதல் பணி தீவிரம்.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி இன்றைய தினமும் (வெள்ளிக்கிழமை)...
நயினாதீவில் படகு விபத்து; பாடசாலை அதிபர் உயிரிழப்பு.!
யாழ். நயினாதீவு கடற்பரப்பில் சிறிய படகில் பயணித்த போது ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கி, பாடசாலை அதிபர் ஒருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....
யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது.!
யாழ்ப்பாணம் - சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் நூதன முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர், 1800 போதை மாத்திரைகளுடன் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்...









