Browsing: செய்திகள்

இரத்தினபுரி – அலபத பிரதேசத்தில் லயன் குடியிருப்பொன்றில் அறையில் இருந்து இளம் தாய் மற்றும் அவரது சிறு மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனப் பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.…

ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் . சம்பவதினம் நித்திரைக்கு சென்ற குறித்த பெண் நித்திரையில் உயிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது . வடமராட்சி வல்வெட்டியைச் சேர்ந்த…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட முற்பட்டவரை பாம்பு தீண்டியுள்ளது. இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த திருடன் அங்கு பொருத்தப்பட்ட CCTV கமராவின்…

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பதர் தீடிரென சுகயீனமுற்று இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். வடமராட்சி மாலை சந்தையை சொந்த இடமாக கொண்ட  இவர் தற்போது கனடாவில் குடும்பத்துடன்…

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியிலுள்ள வீடொன்றின் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கோடியே 32 இலட்சம் பெறுமதியான 68 கிலோ 305 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கிளிநொச்சி…

கிளிநொச்சி நீதிமன்றத்தில் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கிராம் கஞ்சாவை திருடிய நால்வர் இன்றையும் தினம் கைது நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் சான்றுப்படுத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்பு பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உப்புல செனவரத்தினவின் கீழ் இயங்கி வருகின்ற மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரின் பொறுப்பதிகாரி பி.ஐ.மங்கள தலைமையிலான பொலீஸார் இரகசிய தேடுதலை மேற்கொண்டிருந்த வேளையில் இந் நால்வரும் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் நீதிமன்ற பணியாளர். இருவர் நீதிமன்ற சுத்திகரிப்பு மேற்பார்வையாளர்கள். கைதானவர்களில் மூன்று பேர் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள். கைதான நீதிமன்ற பணியாளர் அம்பாறையை சேர்ந்தவர். நீதிமன்ற களஞ்சிய அறையை உடைத்து கஞ்சா திருடி, அதனை விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக […]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியில் போதைப்பொருளான ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 16 அகவையுடைய மாணவன் தவறான முடிவு எடுத்து உயிரினை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று 03.11.2023 இன்று பதிவாகியுள்ளது. 10ஆம் வட்டாரத்தில் வசிக்கும் 16 அகவையுடை குறித்த மாணவன் ஜஸ்போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார். இந்த நிலையில் இவரை வீட்டில் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார்கள் வீட்டில் இருந்த மாணவன் ஐஸ் போதைப்பொருளினை உட்கொண்டு தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளான். உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவந்து பிரேத பரிசோதனைகளில் குறித்த மாணவன் ஐஸ் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இதேவேளை, புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் குறித்த மாணவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாடசாலை செல்லவில்லை என்றும் இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத்தவறியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வடக்கில் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகல் அதிகரித்துள்ளதாக அண்மையில் வடமாகாண […]

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் ஒன்றை இராகலை பொலிஸார் நேற்று (02.11.2023) மாலை மீட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இராகலை ஹரஸ்பெத்த பகுதியில் வசித்த மலிந்த தில்ஷான் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் இராகலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. சடலமாக மீட்க்கப்பட்ட மலிங்க தில்ஷான் தனது வீட்டில் தாய்,தந்தையரை தாக்கி சண்டையிட்டு நான் எங்காவது போய் எனது உயிரை மாய்த்துகொள்வேன் எனது உடம்பு கூட உங்களுக்கு கிடைக்காது என கூறிவிட்டு பின் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேரியுள்ளார். இதையடுத்து குறித்த இளைஞனின் பெற்றோர் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து தனது மகன் மது அருந்திவிட்டு தங்களை தாக்கிவிட்டு […]

மூன்று பிள்ளைகளை தமிழர் தாயகம் காக்க அர்பணித்த தாயின் இன்றய நிலைமை வெட்கி தலை குனிய வேண்டும் எம் தமிழினம் என கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து முகநூல்வாசி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். அந்த தாய் போன்றவர்களுக்கு பாவம் செய்தால் நாங்கள் ஆறு அறிவுள்ள மனிதர்களாக இருக்க முடியாது எனவும் அவர் இடித்துரைத்துள்ளார். சம்பவம் குறித்து அவர் தனது பதிவில், கிளிநொச்சி பிரதேச சபை தரங்கெட்ட நிர்வாக தலைமையில் இயங்குகிறதா என்ற சந்தேகத்தை இந்த சம்பவம் உருவாக்கியுள்ளது. கிளிநொச்சி முருகன் ஆலையத்திற்கு முன்னால் வீதியோரமாக வியாபாரம் செய்து வரும் இவர் மூண்று மாவீரர்களின் தாய் என என்னிடம் தன்னை பல தடவை வீரமாக அடையாளப்படுத்துவார். இன்று வீதியில் செல்லும் அனைவரிடமும் கை ஏந்தி என்னுடைய கடையை உடைக்க வேண்டாம் என சொல்லுங்கள் “ என்று அழுது புலம்புகிறார் காரணம் அது கிளிநொச்சி பிரதேச்சபைக்கான இடம் என்பதால் உடைத்து எறிகிறார்கள். 7-10 […]