உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கிளிநொச்சியில் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்பு – சந்தேகநபர் கைது

இலங்கை செய்திகள் 3 ஆண்டுகள் முன்
25 பார்வைகள்

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியிலுள்ள வீடொன்றின் கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கோடியே 32 இலட்சம் பெறுமதியான 68 கிலோ 305 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பராதிபுரம் பகுதியில் போதை ஒழிப்பு விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நேற்றையதினம் (17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பெறுமதியான கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது .

விசேட நடவடிக்கையில் கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பொலிஸார் போதைப்பொருள் கடத்தல் தொடர் பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0