28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்காக வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு வெளியான முக்கிய தகவல்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதாவது, அவர்கள் வாக்காளர் அட்டையின்றி வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு இயக்கமான பெஃப்ரல் (PAFFREL) தெரிவித்துள்ளது.

கொழும்பில் (Colombo) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலன்று மதியம் நாடு திரும்பும் வாக்காளர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியும். தமது கடவுச்சீட்டை வாக்களிப்பு நிலையங்களில் காண்பித்து, குறித்த தினத்தில் நாடு திரும்பியதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பின் எவ்வித தடையுமின்றி வாக்களிக்க முடியும். எனவே, எவரும் வாக்காளர் அட்டை இன்றி வாக்களிக்க முடியாது என எண்ண வேண்டாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு நன்கொடை வழங்கிய இலங்கை வீராங்கனை

User1

வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

User1

ஜனாதிபதி ரணிலின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள்!

User1

Leave a Comment