28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு !

கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (08) வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15,491 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சுமார் 385 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி 9,631 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 4,860 மில்லியன் ரூபா பெறுமதியான 511 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்படி காலப்பகுதியில் கேரள கஞ்சா, ஹாஷிஸ், போதை மாத்திரைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 162 பேர் கைது செய்யப்பட்டதோடு, 11 படகுகளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்றிரவு கைது: கொழும்பில் பெரும் பரபரப்பு

sumi

யாழ்ப்பாணத்தில் வாகனங்களை அடித்து உடைத்து தீ வைத்து தப்பிச்சென்ற கும்பல் – பெண் காயம் !

User1

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம் !

User1

Leave a Comment