27.9 C
Jaffna
September 16, 2024
இந்திய செய்திகள்சினிமா செய்திகள்

ஹைப்பர் லூப் திரில்லராக தயாராகி இருக்கும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’

தமிழ் திரையுலகில் திரில்லர் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஹைப்பர் லூப் திரில்லராக உருவாகி இருக்கும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ எனும் திரைப்படம் உருவாகி இருப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ எனும் திரைப்படத்தில் பரத், அபிராமி, அஞ்சலி நாயர், தலைவாசல் விஜய், பவித்ரா லட்சுமி, கன்னிகா, அருள் டி. சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத், மிருதுளா சுரேஷ், சினி சிவராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்கிளின் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஃப்ரைடே ஃபிலிம் ஃபேக்டரி -ட்ரீம் ஹவுஸ் -பிஜிஎஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கேப்டன் எம் பி ஆனந்த் -ஹாரூன் -பிஜிஎஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தத் தருணத்தில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இந்த திரைப்படத்திற்கு முதலில் இரண்டு தலைப்புகளை தெரிவு செய்தோம். அதில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’  எனும் தலைப்பை தயாரிப்பாளர்கள் தெரிவு செய்தனர் . இந்த திரைப்படம் ஹைப்பர் லிங்க் நான்லீனியர் பாணியிலான திரைக்கதையை கொண்டிருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இந்த படம் அமையும். இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்ட பரத், அபிராமி உள்ளிட்ட அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

Related posts

GOAT படத்தின் பட்ஜெட்.. ரிலீஸுக்கு முன் தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் இத்தனை கோடியா

User1

யோகி பாபு நடிக்கும் ‘மலை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

User1

ஆந்திரா-கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளங்கள்: 20 ரயில்கள் ரத்து

User1

Leave a Comment