10வது பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரை – பகுதி 02————————————————————–அமைவிடத்தின் பயனை பெற்று கப்பற்துறையை முன்னேற்ற நடவடிக்கை>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>இன்றும் உலக துறைமுகங்கள் கொழும்பு துறைமுகம் வரிசையில் முன்னணி வகிக்கிறது. அமைவிடத்தின் வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பலமான வர்த்தக கப்பல்துறை மத்திய நிலையமாக அதனை மாற்ற வேண்டும். சேவைப் பெறுநர்களுக்கு உரிய வகையில் சேவை கிடைக்கிறதா என்ற கேள்வி உள்ளது. எமது துறைமுகங்களின் இயற்கை அமைவிடமே எமது வலுவாகும். அதனால் எமது துறைமுகத்தை வலுவான பொருளாதார மையமாக மாற்றியமைப்பதற்கான பாரிய திட்டம் உள்ளது. விவசாயத்துறையில் புரட்சிகர முன்னேற்றம்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>நாட்டில் மிகப்பெரிய விவசாய துறை இருந்தாலும் கடனாளிகளான விவசாயிகளே இன்று நாட்டில் இருக்கின்றனர். விவசாய துறைக்காக நாம் பெருமளவில் முதலீடு செய்திருக்கிறோம்.விவசாயத்துறை ஆய்வுகளுக்கு அதிக நிதி செலவிடப்படுகிறது. ஆனால் விவசாயிகள் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். சுகாதாரம், கல்வி, இருப்பிடம் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, வறுமையின் பிடியிலும் சிக்கித் தவிக்கின்றமை பெரும் சமூக பிரச்சினையாகும். விவசாயத்துறை சார் வறுமை பாரிய சமூக அவலமாக மாறியுள்ளது. எனவே விவசாய துறையிலும் பெரும் பாய்ச்சலை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதற்காக விதைஉற்பத்தி நிலையங்களை மீள ஆரம்பிக்க வேண்டியது அவசியம். விவசாய சேவை நிலையங்களை வலுவூட்ட வேண்டும். இலங்கைக்குள் மாத்திரமின்றி ஏற்றுமதியை இலக்கு வைத்த விவசாய உற்பத்திகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே விவசாயத்துறையில் பாரிய பாய்ச்சலை மேற்கொள்வோம். விவசாயத்தை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பகுதியாக மாற்றியமைக்க வேண்டும். ஹெக்டயாருக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்பட்ட பசளை நிவாரணத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளோம். மேலும் நிவாணம் வழங்க வேண்டிய துறைகளுக்கு வழங்க இருக்கிறோம்.அதேபோல் மீன்பிடித்துறையை பலப்படுத்த வேண்டும். எரிபொருள் பிரச்சினையால் படகுகள் கரைகளில் கிடந்தன.படகுகளை மீள கடலுக்கு அனுப்புவதற்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். அதற்கான எமது நீரியல் வளங்களை பெறுமதிசேர் வளங்களாக மாற்றியமைக்கும் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தியிருக்கிறோம்.தனியார் துறை உதவியுடன் கனிய வளத்தினால் உச்சபயன் பெற்று பெறுமதிசேர்க்க நடவடிக்கை>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>கனிய வளங்களை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். தனியார் துறையினரையும் அந்த பணியில் கைகோர்த்துக்கொள்வோம். அது எமது பொருளாதாரத்தில் புதிய திருப்பு முனையாக அமையும் என்று நம்புகிறோம். அடுத்ததாக விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சித் துறை. உலகின் வளர்ச்சி கண்ட அனைத்து நாடுகளும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆய்விற்காக பெருமளவான நிதியை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்குகின்றன. புதிய உற்பத்தி மற்றும் விநியோகச் சேவைகளினால் மாத்திரமே புதிய சந்தை உருவாகும். எனவே விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் மூலமும் மிகப்பெரிய பாய்ச்சல் ஒன்றை செய்ய எதிர்பார்க்கிறோம். ஆசியாவில் பல நாடுகள் இந்தத் துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. இது சார்ந்த புதிய சந்தையில் பங்காளராக நாம் தவறிவிட்டோம். சம்பிரதாய முறைகளிலே தொடர்ந்து இருக்கிறோம். அந்த துறைசார் முக்கியஸ்தர்கள் பலரும் அதற்கான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இந்தத் துறையில் பாரிய முன்னெற்த்தை எட்ட எதிர்பார்க்கிறோம். டிஜிட்டல் மயமக்கல் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு பங்களிக்க ஹான்ஸ் விஜேசூரிய முன்வந்துள்ளார். நாட்டை முன்னேற்றுவதில் டிஜிட்டல்மயமாக்கல் முக்கியமானது. அந்த இலக்குகளை அடைந்துகொள்ள அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றும்..அதன் படி நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டிய ஆட்சியே கிடைக்கும் என்பதை கூறியிருந்தோம். அதனால் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டினை எட்டியுள்ள ஒரு நாட்டிற்கு அந்த ஒப்பந்தத்தை விடுத்துச் செல்ல முடியாது என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம். அதன்படி சர்வதேச நாணயநிதிய உடன்பாடுகளுக்கு அமைவாக பொருளாதாரத்தை கையாள்வதாக பொதுத் தேர்தலில் மக்களுக்கு உறுதியளித்தோம். அதன் படி பல செயற்பாடுகளை முன்னெடுக்கிறோம். தற்போது மூன்றாவது மீளாய்வுக் கூட்டம் தாமதமாகியுள்ளது. இதனை செப்டம்பர் மாதம் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. மூன்றாவது மீளாய்வுக் கூட்டத்தை ஆரம்பிக்க சில காலம் பிடித்தது. பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் கடந்த 17 ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்தனர். கடன் மறுசீரமைப்பு குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்த வாரத்திற்குள் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் 23 ஆம் திகதி கைச்சாத்திட முடியும் என எதிர்பார்க்கிறோம். சர்வதேச நாணய நிதியத்துடனான பயணத்தில் அதில் முக்கியமாக முன்னெடுப்பாகும். கடன் மறுசீரமைப்பும் அதனுடனான உடன்பாடுகளில் அடங்குகிறது. நாம் ஆட்சியை பொறுப்பேற்ற போது கடன்மறுசீரமைப்பு உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. வர்த்தக சந்தையில் பிணைமுறி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் அதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டதாக ஊடகங்களின் ஊடாக அறிந்தோம். இருவருடங்களுக்கு மேலாக பேச்சுகள் நடைபெறுகிறது.கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவு செய்யாமல் பொருளாதாரத்தை முன்னெடுப்பது சிரமமானது. கடன் மறுசீரமைப்பு பேச்சுக்களின் இறுதிக்கட்டமே நாம் ஆட்சிக்கு வருகையில் காணப்பட்டது. அந்த முன்னெடுப்புகள் சாதகமானதா பாதகமானதா என தற்பொழுது விவாதிப்பதில் பயனில்லை.அது தான் யதார்த்தம். விரைவில் ஒவ்வொரு நாடுகளுடனும் தனித்தனியாக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம். வர்த்தகக் கடன் தொடர்பில் ஆரம்ப கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் அந்த பணிகளை நிறைவு செய்ய முடியும் எனநம்புகிறோம். சர்வதேச நாணய நிதியத்துடனான கடன்மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாட்டை இவ்வருடத்திற்குள் வெற்றிகரமாக நிறைவுசெய்ய இயலுமாகும். பணியாளர் மட்ட உடன்பாடு இவ்வாரம் எட்டப்படுவதோடு பொருளாதாரத்தை நம்பகமான நிலைக்கு கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கும்.நாம் கொள்கை ரீதியில் எமது பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள ஆழமான நெருக்கடிகளுக்கு இந்த நிகழ்ச்சிநிரல் மாத்திரம் போதுமானது என கருதவில்லை.எமது நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிர்வகிப்பதற்கு இந்த செயற்பாடுகள் போதுமானதாக இருக்கும். ஆனால் எமது பொருளாதார முறைமை பாரிய சரிவை கண்டிருக்கிறது. எமது பொருளாதாரத்திற்கு பாரிய மூலோபாய எழுச்சி அவசியம்.அதில் மூன்று அம்சங்கள் அடங்கும் .எமது பொருள் சேவைகள் உற்பத்தித் துறையில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்கை மேல் மாகாணம் வழங்குகிறது. அது போலவே ஏனைய பிரதேச மக்களின் பங்களிப்பும் அதற்கு அவசியப்படுகிறது.பொருட்கள் சேவைகள் உற்பத்தியில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பும் அவசியம். மக்களை கைவிட்டுச் செய்யும் பொருளாதார அபிவிருத்தியில் பயனில்லை.மக்களை மனிதத் தூசிகளாக்கும் பொருளாதாரத்தில் பயனில்லை. அனைத்து பொருளாதார செயற்பாடுகளிலும் மக்களை பங்குதாரர்களாக்க வேண்டும். அனைத்து மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக்காமல் அதன் நன்மை மக்களை சென்றடையாது. தேசிய நிதி சிறு குழுவின் கைகளில் மாத்திரம் இருக்குமானால் அது அரசாங்கத்திலோ பொருளாதாரத்திலோ ஸ்தீர நிலையை ஏற்படுத்தாது. இயற்கை வளங்கள் பொருளாதார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. அனைவரும் இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புகையில் அது சிறு குழுவின் கரங்களுக்கு செல்லுமானால் பொருளாதாரப் பயணம் ஸ்தீரமடையாது. சமூகமும் வலுவடையாது. பொருளாதாரத்தின் பயன் நியாயமாக மக்களை சென்றடைய வேண்டும்.சந்தையைக் கையாள்வது தொடர்பிலும் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எமது நாடு பாரிய சந்தையுள்ள இடமல்ல. சந்தையில் ஏகபோக உரிமை காணப்படுகிறது. நாளாந்த அரிசிப் பயன்பாடு 6500 மெற்றிக் தொன்களாகும். சிறிய சந்தைகளில் ஏகபோக உரிமை உருவாகலாம். பொருளாதார அடிப்படையில் எமது சந்தை நிர்ணயிக்கப்படவில்லை. ஏகபோக உரிமைப் படித்தான் எமது சந்தை நிர்ணயிக்கப்படுகிறது. பொருட்களின் விலைகளை ஏற்றி இறக்க அவர்களால் முடியும். நெல் விலையை கூட அவர்களால் நிர்ணயிக்க முடிகிறது. அரிசி விலையையும் அவர்களால் தீர்மானிக்க முடியும்.இதனால் பொருட்கள் சேவைகளை பெற பாரிய கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே மீளவும் சந்தையின் போக்கை மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு நியாயமான முறையில் பொருட்கள் சேவைகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதனை அரசாங்கம் மீற முடியாது. போட்டித்தன்மை ஊடாக இதனை செய்ய முடியும். விலைகளை நிர்ணயிக்கலாம். ஆனாலும் சில துறைகளை மேற்பார்வை ஊடாக கையாளலாம். பாராளுமன்றத்தின் ஊடாக நிர்ணயச் சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சந்தைகளிலுள்ள திரிபுநிலையை சீர் செய்ய அவை போதுமானதா. அது தொடர்பான சட்டங்கள் போதுமானதா என பார்க்க வேண்டும். சில துறைகளை நாம் கையாள வேண்டும். சில துறைகள் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானவை. அவை அரச பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். வலுசக்தி சந்தையை கையாளுகையில் அரசின் பங்கும் இருக்க வேண்டும்.அவை பொருளாதாரத்தில் முக்கியமானவை.இவற்றில் ஏற்படும் சில தடுமாற்றங்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே அவ்வாறான துறைகளிலும் அரசாங்கத்தின் வகிபாகம் ஒன்று இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் அறிந்துள்ளோம்.அதே போன்று நிதித்துறை சுதந்திரமாக செயற்பட ஆரம்பித்தால் என்ன நடக்கும். மத்திய வங்கி மேற்பார்வை நிறுவனமாக செயற்படுகிறது. நிதிச் சந்தையிலும் அரச வகிபாகம் இருக்க வேண்டும். அடுத்து பரவலடைந்து காணப்படும் சந்தைகளுக்கு பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்காக கூட்டுறவுச் அமைப்பை வலுவானதாக மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம்.சந்தையில் பலமான போட்டியாலராக கூட்டுறவுத்துறையை பயன்படுத்த இருக்கிறோம். பொருட்கள் மற்றும் சேவைகளை முன்னேற்றுவதற்காக சில துறைகளை அடையாளங் கண்டுள்ளோம். சுற்றுலாத் துறையில் பெரும் பாய்ச்சலை செய்யக்கூடிய இயலுமை தொடர்பில் அறிந்துள்ளோம். அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் 8 பில்லியன் டொலர் பெறுமதியான சுற்றுலா பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கும் எதிர்பார்த்திருக்கிறோம். 2018 இல் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். அடுத்ததாக தகவல் தொடர்பாடல் துறை உலகின் அனைத்து தொழில் துறைகளிலும் தாக்கம் செலுத்துகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் நாட்டுக்கு அவசியம். தற்போது எமது நாட்டில் 85 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப தொழில்துறையினர் மாத்திரமே உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையை 5 வருடங்களில் 2 இலட்சமாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம். தகவல் தொழில்நுட்பத்துறை ஏற்றுமதி வருமானம் குறைவாகவே உள்ளது. 5 பில்லியன் டொலர் வருமானத்தை பெறும் வகையில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஐந்து துறைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதற்காக கல்வி,மொழி உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்துகிறோம். இன்றும் உலக துறைமுகங்களின் வரிசையில் கொழும்பு துறைமுகம் முன்னணி வகிக்கிறது. அமைவிடத்தின் வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பலமான வர்த்தக கப்பல்துறை மத்திய நிலையமாக அதனை மாற்ற வேண்டும். சேவைப் பெறுநர்களுக்கு உரிய வகையில் சேவை கிடைக்கிறதா என்ற கேள்வி உள்ளது. எமது துறைமுகங்களின் இயற்கை அமைவிடமே எமது வலுவாகும். அதனால் எமது துறைமுகத்தை வலுவான பொருளாதார மையமாக மாற்றியமைப்பதற்கான பாரிய திட்டம் உள்ளது. நாட்டில் மிகப்பெரிய விவசாய துறை இருந்தாலும் கடனாளிகளான விவசாயிகளே இன்று நாட்டில் இருக்கின்றனர். விவசாய துறைக்காக நாம் பெருமளவில் முதலீடு செய்திருக்கிறோம்.விவசாயத்துறை ஆய்வுகளுக்கு அதிக நிதி செலவிடப்படுகிறது. ஆனால் விவசாயிகள் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். சுகாதாரம், கல்வி, இருப்பிடம் அற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, வறுமையின் பிடியிலும் சிக்கித் தவிக்கின்றமை பாரிய சமூக பிரச்சினையாகும். விவசாயத்துறை சார் வறுமை பாரிய சமூக அவலமாக மாறியுள்ளது. எனவே விவசாய துறையிலும் பெரும் பாய்ச்சலை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதற்காக விதைஉற்பத்தி நிலையங்களை மீள ஆரம்பிக்க வேண்டியது அவசியம். விவசாய சேவை நிலையங்களை வலுவூட்ட வேண்டும். இலங்கைக்குள் மாத்திரமின்றி ஏற்றுமதியை இலக்கு வைத்த விவசாய உற்பத்திகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே விவசாயத்துறையில் பாரிய பாய்ச்சலை மேற்கொள்வோம். விவசாயத்தை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பகுதியாக மாற்றியமைக்க வேண்டும். ஹெக்டயாருக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்பட்ட பசளை நிவாரணத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளோம். மேலும் நிவாணம் வழங்க வேண்டிய துறைகளுக்கு வழங்க இருக்கிறோம்.அதேபோல் மீன்பிடித்துறையை பலப்படுத்த வேண்டும். எரிபொருள் பிரச்சினையால் படகுகள் கரைகளில் கிடந்தன.படகுகளை மீள கடலுக்கு அனுப்புவதற்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். தற்பொழுது அமைவ கடலில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கான எமது நீரியல் வளங்களை பெறுமதிசேர் வளங்களாக மாற்றியமைக்கும் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தியிருக்கிறோம்.கனிய வளங்களை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். தனியார் துறையினரையும் அந்த பணியில் கைகோர்த்துக்கொள்வோம். அது எமது பொருளாதாரத்தில் புதிய திருப்பு முனையாக அமையும் என்று நம்புகிறோம். அடுத்ததாக விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சித் துறை. உலகின் வளர்ச்சி கண்ட அனைத்து நாடுகளும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆய்விற்காக பெருமளவான நிதியை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்குகின்றன. புதிய உற்பத்தி மற்றும் விநியோகச் சேவைகளினால் மாத்திரமே புதிய சந்தை உருவாகும். எனவே விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் மூலமும் மிகப்பெரிய பாய்ச்சல் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். ஆசியாவில் பல நாடுகள் இந்தத் துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. இது சார்ந்த புதிய சந்தையில் பங்காளராக நாம் தவறிவிட்டோம். சம்பிரதாய முறைகளிலே தொடர்ந்து இருக்கிறோம். அந்த துறைசார் முக்கியஸ்தர்கள் பலரும் அதற்கான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இந்தத் துறையில் பாரிய முன்னெற்த்தை எட்ட எதிர்பார்க்கிறோம். டிஜிட்டல் மயமக்கல் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு பங்களிக்க ஹான்ஸ் விஜேசூரிய முன்வந்துள்ளார். நாட்டை முன்னேற்றுவதில் டிஜிட்டல்மயமாக்கல் முக்கியமானது. அந்த இலக்குகளை அடைந்துகொள்ள அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அவரை அந்த அமைச்சின் செயலாளராகவும், ICT நிறுவனத்தின் தலைவராகவும், டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராகவும் நியமிக்க நான் தயாராக இருக்கிறேன். இதை ஒரே இடத்தில் இருந்து இயக்க வேண்டும். பொருளாதாரத்தை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டுச் செல்வதிலும் மக்களுக்கு சேவைகளை வழங்குவதிலும் டிஜிட்டல் மயமாக்கல் மிக முக்கியமானது.எமது நாடு தற்போதைய நிலையில் இருந்து புதிய நிலைக்கு உயர்த்தப்பட வேண்டுமாயின், அந்த அந்த உயர் நிலை “டிஜிட்டல் ஸ்ரீலங்கா” ஆக அமைய வேண்டும். அதற்காக அரசாங்கம் முழுமையான அரப்பணிப்புடன் செயலாற்றும். அதன் வெற்றிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அது சாத்தியமாகும் என்ற நம்பிக்கையும் எமக்கு இருக்கிறது. கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்>>>>>>>>>>>>>>>அடுத்த பிரதான திட்டமா cleaning sri lanka வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். குறிப்பாக, தூய்மையான இலங்கை என்பது சுற்றுச்சூழல் அமைப்பை மட்டும் குறிக்கவில்லை. மக்கள் அரசியல் அதிகாரத்தில் சாதகமான மாற்றங்களை கொண்டு வர முடியும்.அரசாங்க அதிகாரிகள் அமைப்பில் நல்ல மாற்றங்களைச் செய்யலாம். ஆனால் ஒரு நல்ல அரசை கட்டியெழுப்புவதற்கு மக்களிலும் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும். மக்களில் ஒரு நல்ல மாற்றம் இல்லாமல், மேலே இருக்கும் அரசியல் அதிகாரத்தை மாற்றுவதால் மாத்திரம் இலக்குகளை அடைந்துகொள்ள முடியாது. அதனால்தான் நல்ல பிரஜைகள், நல்ல மனப்பான்மை, நல்ல செயல்பாடுகள் மற்றும் நல்ல நடத்தை கொண்ட மக்களை உருவாக்க வேண்டும்.அதுவே தூய்மையான இலங்கை எனும் வேலைத்திட்டத்தின் நோக்கங்களாக அமைகின்றது. குறிப்பாக இப்படி ஒரு தேசிய சபையில் விவாதிக்கக் கூடாத, பிரதேச சபை மட்டத்திலான பிரச்சினையாக இருந்தாலும், நம் நாட்டுப் பெண்கள் கழிப்பறைக்குச் செல்ல இந்த நாட்டில் சுத்தமான கழிப்பறை அமைப்பு இருக்கிறதா என்பதும் கேள்விக்குரியாகும், தூர இடங்களில் இருந்து கொழும்புக்கு வரும் சில பெண்கள் வீடு வரும் வரை தண்ணீர் அருந்துவதில்லை. சுத்தமான கழிப்பறை கட்டமைப்பொன்று இல்லாமையே அதற்கு காரணமாகும். கழிப்பறை கட்டமைப்பு கட்டப்பட்டாலும், சமூகத்தில் நல்ல மனப்பான்மை கட்டியெழுப்பப்படவில்லை. சாதாரண மக்களுக்கு பொது இடமாக அன்றி அவை அழிவுகரமான இடமாக மாறியுள்ளன. இதனால் என்ன தெரிகிறது? இது எமது நாட்டு ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவிடம் காணப்படுகின்ற அணுகுமுறையாகும். எனவே, தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் ஊடாக அவ்வாறான மனோபாவத்தையும் மாற்ற எதிர்பார்க்கின்றோம்.சமுதாயத்தில் பொறுப்புள்ள பிரஜையாக மாறுவது எவ்வாறு? இப்போது மட்டும் வாழ்ந்து களிப்பது எவ்வாறு இன்று சிந்திக்காமல் நம் எதிர்கால சந்ததியினருக்காக நம் நாட்டின் வளங்களை எவ்வாறு பாதுகாப்பது, சாரதி என்ற வகையில் நாம் எவ்வாறு வீதியில் வாகனத்தை செலுத்துவது?நாம் எப்படி பாதைகளை கடப்பது? நாம் ஒரு இடத்தில் நுழையும் போது நாம் எப்படி மற்றவர்களை மரியாதையுடன் வரவேற்க முடியும்? இவ்வாறானதொரு சமூகத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது. ஒருவரை ஒருவர் பற்றி கவலைப்படாத சமூகம். ஒன்றுக்கொன்று முரண்பட்ட சமூகமே இன்று கட்டியெழுப்பட்டுள்ளது. ஒரு சிறிய சம்பவம் மோதலை நோக்கி நகர்த்தப்படுகிறது. பொறுமை இல்லை, மற்றவரை மன்னிக்கும் மனப்பாங்கு இல்லை. மற்றவரை இழிவாகப் பார்க்கும் சமூகம் என்று ஒட்டுமொத்த சமுதாயமும் வறண்ட சமுதாயமாக மாறியுள்ளது. எனவே, இப்படியொரு சமுதாயத்திற்கு ஈரம் தேவை. வறண்ட முகங்கள், கடுமையான முகம் என்பவற்றோடு சமுதாயம் முன்னேற முடியுமா? புன்னகைக்கும் சமுதாயம் வேண்டும். பிறரை கருணையுடன் நடத்தும் சமுதாயம் வேண்டும். மனிதநேயப் பண்புகள் நிறைந்த சமுதாயம் தேவை. பிறர் துன்பத்தில் கருணை காட்டும் சமுதாயம் வேண்டும்.குறிப்பாக, நமது நாட்டின் கல்வி, இலக்கியம், சட்டம், கலாச்சாரம் ஆகியவற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கிறோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த சமூகத்தில் மிகவும் உயர்வான மற்றும் தரமான சமுதாயத்தை உருவாக்கும். வறுமையை ஒழிக்க பொருளாதார ஒத்துழைப்பு>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>வறுமை ஒழிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பிரஜைக்கும் நியாயமான உணவு வேளை, பிள்ளைகளுக்கு நல்ல கல்வி, வாழும் வீடு, நல்ல வருமானம் மற்றும் மன சுதந்திரம் ஆகியவற்றை விரும்புகிறார்கள் அல்லவா? குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வறுமையை ஒழிப்பது அரசின் முக்கிய பணியாக உள்ளது.எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்கான ஆரம்பமாக தற்போது வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் பாடசாலை மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒக்டோபர் மாதம் முதல் ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவு அதிகரிக்கப்படும். எதிர்வரும் பட்ஜெட்டில் அரச ஊழியர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்படும்.அனைத்து பிரஜைகளையும் கவனிப்போம்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>குழந்தைகளின் போஷாக்கு குறைபாடு எதிர்கால சமூகப் பேரழிவாக மாறக்கூடும். எனவே, பிள்ளைகளின் ஊட்டச் சத்து குறைபாட்டைக் போக்க அந்த வறிய குடும்பங்களுக்கு உதவிக் கொடுப்பனவுகளை வழங்கவும் எதிர்பார்க்கிறோம். கர்ப்பிணித் தாய்மார்களைப் பாதுகாக்க, போஷாக்குள்ள உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.தற்போதைய வறுமையின் காரணமாக பெற முடியாத பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க தீர்மானித்திருக்கிறோம். ஆனால், நீண்டகாலமாக இதனை அரசாங்கத்தினால் செய்ய முடியாது. எந்தவொரு நாட்டிலும் எந்த நேரத்திலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாகக்கூடிய மக்கள் உள்ளனர். பொருளாதாரத்தில் ஈடுபாடு இல்லாத மக்கள் சமூகமும் உள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளிலும் இப்படிப்பட்ட சமூகம் இருக்கிறது. எனவே, அந்த சமூகத்தை எப்போதும் கவனித்துக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கைவிட மாட்டோம்.இலங்கையில் அங்கவீனமானவர்கள் உள்ளனர். அங்கவீனமான குழந்தை உள்ள வீட்டில், அதுவே பிரச்சினையாக மாறுகிறது. அவர்களுக்கு சம்பிரதாய வாழ்வியல் முறை கிடைக்காமல் போகிறது. அந்த குழந்தையின் இயலாமையால் பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களின் முழு வாழ்க்கையும் அரப்பணிக்க வேண்டியிருக்கிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் நிலை இதுவாகவே இருக்கிறது. எனவே, மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க விசேட செயன்முறை மற்றும் உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.எமது அரசாங்கம் அனைத்து மக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தும் அரசாங்கமாகும். மக்களை கைவிடாத அரசாங்கமாக மாற வேண்டும். இது ஒவ்வொரு அரசாங்கத்தினதும் பொறுப்பும் கடமையுமாகும். அந்த பொறுப்பை நிறைவேற்றுவோம்.மேலும், எப்பொழுதும் நிவாரணம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலம் மட்டும் வறுமை ஒழியும் என்று நாங்கள் நம்பவில்லை. வறுமையை ஒழிக்க, பிரதிபலன்களை பெறக்கூடி பொருளாதார முயற்சிகளில் ஈடுபட வேண்டும். தற்போது, வறுமையில் வாடும் பலரின் முக்கிய வருமான வழிமுறையாக விவசாயமே உள்ளது. விவசாயத்தை இலாபகரமான தொழிலாக மாற்றாமல், வறுமையில் இருந்து மீட்க முடியாது.மேலும், மீன்பிடி தொழிலை இலாபகரமான தொழிலாக மாற்றாமல் மீனவர்களை வறுமையில் இருந்து விடுவிக்க முடியாது. எனவே, அவர்கள் தற்போது ஈடுபட்டுள்ள பொருளாதார செயற்பாடுகளை வெற்றிகரமானதாகவும் இலாபகரமானதாகவும் மேம்படுத்துவதே எங்களது முதல் முயற்சியாகும். ஆனால் இந்த பொருளாதார மூலதனங்கள் மட்டும் ஒரு கிராமத்திற்கு போதுமானது அல்ல. புதிய பொருளாதார முறைமைகளும் வாய்ப்புகளும் கிராமங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும்.நமது சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக, சிறு, நடுத்தர தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற எண்ணம் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு, மூலதனம் மற்றும் சந்தையைக் கண்டறிவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.நம் நாட்டில் சந்தை வாய்ப்புகள் போதுமானதாக இல்லை. நமது சந்தையில் 38 இலட்சம் என்ற தொகையே உள்ளனர். இது ஒரு சிறிய சந்தை. இந்த சிறிய சந்தையில் மட்டும் வியாபாரம் செய்து பொருளாதாரத்தில் தொழில் உரிமையாளர்கள் , தொழில்முனைவோர், வர்த்தகர்கள் என்று பலமான சமூக கட்டமைப்பை உருவாக்க முடியாது. எனவே இவர்கள் நாட்டுக்கு வௌியிலிருக்கும் சந்தை வாய்ப்புக்களை தேட வேண்டியது அவசியமாக உள்ளது. தூதரக சேவை முழுமையாக மறுசீரமைக்கப்படும்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>அதன்படி, எங்கள் தூதரகத்தை முழுமையாக மறுசீரமைப்போம். இராஜதந்திர உறவுகள் தொடர்பில் எமக்கு பொறுப்பும் கடமையும் உள்ளது. ஆனால் இந்த இலங்கை உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தையை தேடுவது தொடர்பிலான பொறுப்பு உள்ளது. அதற்காக எங்கள் தூதரகங்களை செயற்படுத்துவோம். நமது நாட்டில் மிகவும் தொழில்நுட்பத் திறன்களையும் ஆற்றலையும் கொண்ட ஒரு கட்டுமானத் தொழில் இருக்கிறது. இந்த கட்டுமானத் தொழிலை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்ல திட்டமிட வேண்டும்.எங்களிடம் சில தனித்துவமான தயாரிப்புகள் உள்ளன. அந்தப் பொருட்களுக்கு அதிக மதிப்புகள் மற்றும் பெறுமதிகளை ச