இந்தியாவின் – உத்திரப்பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
உத்திரப் பிரதேசத்தின் ஜான்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக 47 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வைத்தியசாலையில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி 10 சிறுவர்கள் உயிரிழந்ததுடன் 37 பேர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வைத்தியசாலையின் மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தீப்பரவலானது பல மணிநேரத்துக்குப் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.