பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை (2024-11-21) ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை.இன்று எமது பாராளுமன்றத்தில் சிறப்புக்குரிய நாள். அதிகாரம் இரு குழுக்களுக்கு கைமாறிய வண்ணம் இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்புக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இலங்கை வரலாற்றில் அது முக்கியமானது. எமது நாட்டின் தேர்தல் முறையில் அதிகளவான எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு மலையகம் தெற்கு என அனைத்து மாகாணங்களும் மக்களும் அதற்கு பங்களிப்பு செய்துள்ளன. இனவாதத்திற்கு இடமளிக்கப்படாது>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>இவ்வளவு காலமும் மாகாணங்கள், தேசியத்துவம், மதங்கள் என்ற அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் உருவாகின. அதனால் மக்கள் இடையே பிரிவினை,சந்தேகம், இனவாதம் என்பன வலுவடைந்தன. ஒரு தரப்பில் இனவாதம் வலுவடையும் வேளையில் அதற்கு எதிராக மாற்றுத் தரப்பிலும் இனவாதம் வலுப்பெரும். இனவாதம் ஒரே இடத்தில் இருக்காது. அது பற்றிய வரலாற்றை எமது நாட்டிலும் அரசியலும் சமூகத்திலும் பார்ததிருக்கிறோம். ஆனால் அனைத்து இன மக்களும் எம்மை நம்பிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். எம்மை நம்பாமல் ஏனைய கட்சிகளை நம்பும் மக்கள் உள்ளனர். அது ஜனநாயகம் ஆகும். தனியொரு கட்சியை சூழ்ந்து மக்கள் செயற்பாடுகளை உருவாக்குவது ஜனநாயகமான அமையாது. பல்கட்சி முறையை பலப்படுத்துவோம்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>பல நிலைப்பாடுகளை கொண்ட அரசியல் கட்சிகளின் இருப்புதான் ஜனநாயகமாகும். அதேபோல் பல்வேறு கொள்கைகளை கொண்ட அரசியல் குழுக்களின் இருப்பும் ஜனநாயகமாகவே அமையும். எனவே ஜனநாயக ஆட்சி என்ற வகையில் பல கட்சி அரசியலை நாம் வெறுப்பதில்லை. கொள்கை ரீதியாக அதனை ஆதரிப்போம். எமக்கு வாக்களித்த, வாக்களிக்கான அனைத்து மக்களினதும் தேவைகளை பூர்த்தி செய்ய கடமையைப் பட்டிருக்கிறோம். தேர்தலால் மக்களுக்கும் எமக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. தேர்தல் காலத்தில் நாம் எமது கொள்கை பிரகடனத்தை முன்வைக்கிறோம் அதன் மீது நம்பிக்கை கொள்ளும் மக்கள் எமக்கு வாக்களிகின்றனர். எனவே அந்த பிணைப்பில் மக்கள் தமது பங்கை செய்துவிட்டனர். பங்குக்கு எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். தற்போது நாம் எமது பங்கை ஆற்ற வேண்டிய தருணம் வந்துள்ளது. எனவே நானும் எமது அரசாங்கமும் மக்கள் நம்பிக்கை எவ்வகையிலும் சிதைந்துபோக இடமளியாமல்,இந்த ஆட்சியை கொண்டுச் செல்ல கடமைப் பட்டிருக்கிறோம். அதற்கு நாம் பொறுப்புக்கூறுவோம். பிரதேசம், கலாசார அடிப்படையில் மாற்றங்கள் இருந்தாலும் வெவ்வேறு மொழிகளை பேசினாலும் வெவ்வேறு மதங்களை பின்பற்றினாலும் இந்த தேர்தலில் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்ததை காண்பித்திருக்கிறோம். தேசிய ஒருமைப்பாடு கட்டியெழுப்பப்படும்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>எனவே எமது நாட்டு மக்கள் நீண்ட கால கனவாக காணப்பட்ட தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாக எமக்கு பல நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் இனி இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமில்லை. எந்த விதத்திலும் மதவாதச் செயற்பாடுகள் எழுச்சி பெறுவதற்கும் இடமளியோம். நாம் போதுமென்ற அளவில் இனவாதத்தினால் பாதிப்பை கண்டிருக்கிறோம். ஆறுகள் நிறைய கண்ணீரை கண்டிருக்கிறோம். இன்று நாட்டில் ஒவ்வொருவர் இடையிலும் குரோதமும் சந்தேகவும் அதிகளவில் வலுப்பெற்றுள்ளது. இன்று இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாம் எமது எதிர்கால சந்ததிக்கு அவ்வாறான நாட்டை கையளிக்க கூடாது என்ற பொறுப்புடன் செயற்பட வேண்டும். அரசியல் செய்ய பல போராட்ட வடிவங்கள் இருக்கலாம்.பொருளாதாரம், ஜனநாயகம், என்று பல வகையில் இருக்கலாம். ஆனால் இனி எவரும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளியோம் என்று உறுதியளிக்கிறேன். பாராளுமன்றத்தின் கௌரவத்தை மீள ஏற்படுத்துவோம்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>இந்த மக்கள் ஆணையில் மற்றுமொரு எதிர்பார்ப்பு மறைந்திருந்தது. நாட்டில் நீண்டகாலமாக காணப்பட்ட முறையற்ற அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்துக்கு தெரிவான நான் 24 வருடங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினேன். 24 வருடங்களும் இந்த பாராளுமன்றம் மக்கள் வெறுப்பை தேடிக்கொண்ட காட்சிகளை கண்ணால் கண்டிருக்கிறேன். பாராளுமன்றம் மீது மக்கள் நம்பிக்கை இழந்ததை பார்த்திருக்கிறோம். சபைக்குள்ளும் சபைக்கு வௌியில் உள்ள மக்கள் மத்தியிலும் இந்த உயர் சபை தொடர்பிலான நம்பிக்கை படிப்படியாக அற்றுப் போனது. உயர்வான ஒரு சபையில் இருந்துகொண்டு மக்களை புறக்கணிக்கும்,மக்கள் வெறுப்பை தூண்டும், மக்களால் விரட்டியடிக்கப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். அவ்வாறானதொரு பாராளுமன்றம் இந்த நாட்டை ஆள்வதற்கு பொருத்தமானதாக அமையுமென நான் நம்பவில்லை. நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கும் பொருத்தமானது அல்ல. இனியும் மக்களின் நிதி அதிகாரத்தை கையாள்வதற்கு அந்த பாராளுமன்றம் பொருத்தமற்றது. மக்கள் நிதியை கையாளும் அதிகாரம் பாராளுமன்றத்திடமே உள்ளது. மக்களுக்கான சட்டங்களை இயற்றும் அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே உள்ளது. எனவே, தொடர்ந்தும் மக்களிடம் இருந்து தூரமான பாராளுமன்றமாக இருக்க முடியாது. இந்தப் பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் பாராளுமன்றத்தின் மீயுர்வை பாதுகாக்க வேண்டும். இந்தப் பாராளுமன்றம் பெருமளவான புதிய பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறைந்துள்ளது. அவர்களுக்கு நல்ல பழக்கங்களை துரிதமாக வழங்கக் கூடிய பாராளுமன்றம் இது. புதிய சபாநாயகரும் பணிக்குழாமும் தெரிவு செய்யப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் இந்த பாராளுமன்றத்தை மீளக்கட்டமைக்க ஒத்துழைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். அவ்வாறு ஒத்துழைக்காவிட்டால் தொடர்ந்தும் மக்களுக்கு மறைவான குகையாக இருக்கக் கூடாது.இந்தப் பாராளுமன்றத்தில் போதுமான நவீன தொழில்நுட்ப முன்னேற்த்திற்கு அமைய நாளாந்தம் நடக்கும் அனைத்தும் மக்களுக்கு வெளிப்படையாக இருக்கும். மக்களுக்கு மறைவான நிலையமாக இந்தப் பாராளுமன்றம் இருக்காது.மக்களுக்கு வெளிப்படையான நிலையமாக மாற்ற நாம் தொடர்ந்தும் முயன்று வருகிறோம். நாம் அனைவரும் மக்கள் பிரதிநிதிகளாயின் நாம் பேசும் விடயம்,நடத்தை,வெளியிடும் கருத்து என அனைத்தும் மக்கள் முன்னிலையில் ஆராயப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது தான் இறுதிமுடிவு என நான் யாராவது நினைப்பதாக இருந்தால் அது இறுதியானதல்ல. அடுத்த அதிகார பரிமாற்றம் வரை மற்றும் அடுத்த மக்கள் ஆணை உரசிப்பார்க்கப்படும் வரை எம்மை பரீட்சித்துப் பார்க்கும் அதிகாரம் மக்களுக்குள்ளது. இந்த பாராளுமன்றம் எதிர்வரும் சில வருடங்களில் மக்களின் பரிசோதனையில் சித்தியடைந்த பாராளுமன்றமாகும் என கருதுகிறேன். அதற்கு சபாநாயகரினதும் எம்.பிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.திருப்தியான அரச சேவை உருவாக்கப்படும்.>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>இலங்கை வரலாற்றில் அரச ஊழியர்கள் அதிகமாக அரசாங்கத்திற்கு வாக்களித்த தேர்தல் என்பதை இந்த மக்கள்ஆணையில் நாம் காண்கிறோம். எமது அரச சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல மனப்பாங்கு கிடையாது. அரச சேவை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் சில பாதகமாக எண்ணங்கள் காணப்படுகிறது. அரச சேவையில் இருப்போருக்கு தமது பணி தொடர்பிலும் திருப்தி கிடையாது. அதனால் மக்களை திருப்திப்படுத்தாத அரச சேவையும் சேவையில் ஈடுபட்டுள்ளோர் திருப்தி அடையாத அரச சேவையும் தான் எம்மத்தியில் எஞ்சியுள்ளது. அதனால் இரு தரப்பிலும் திருப்தியான அரச சேவையை உருவாக்குவது எமது முழுமையான பொறுப்பாகும்.இந்த மக்கள் ஆணையின் போது சிறந்த அரச சேவைக்காக எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் மறுசீரமைப்புகளுக்கான அவர்களின் பக்கசார்பை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். எமக்கு பலமான அரச சேவையின்றி முன்னோக்கிச் செல்ல முடியும் என்று நாம் கருதவில்லை.உலகில் அனைத்து நாடுகளும் புதிய திருப்புமுனையின் போதும் அரசியல் தலைமையின் வழிகாட்டலைப் போன்றே அரச துறையின் செயற்பாடும் முக்கியமானதாகிறது. அரசியல் கட்சிகளுக்கு எத்தகைய எதிர்பார்ப்புகள் இலக்குகள் இருந்தாலும் அதற்கு உகந்த அரச சேவையொன்றை உருவாக்க முடிந்தால் மாத்திரமே அவற்றை சாத்தியமாக்க முடியும். அதனால் செயற்திறனான மக்களின் விருப்புக்கேற்ற அரச சேவை இந்த நாட்டில் மீண்டும் உருவாக்க நாம் எதிர்பார்க்கிறோம்.அதற்கு அரச சேவையில் இருந்தே பாரிய மக்கள் ஆணை கிடைத்துள்ளது.அது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். ஜனநாயக அரசை உருவாக்குவோம்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>விசேடமாக ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் தொடர்பில் நோக்கினால் அனைத்து பிரஜைகளுக்கும் தாம் பின்பற்றும் மதம்,மொழி மற்றும் கலாசாரத்திற்கு அமைய தனிமைப்படத் தேவையில்லை. தாம் பின்பற்றும் மதம் தனக்கு மேலதிக அழுத்தத்தைத் கொடுப்பதாக எண்ணத் தேவையில்லை. தமது கலாசாரம் தனக்கு மேலதிக அழுத்தம் தருவாதக நினைக்கத் தேவையில்லை. தாம் ஆதரிக்கும் அரசியல் மேலதிக அழுத்தம் கொடுப்பதாக கருதத் தேவையில்லை. அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம். ஒவ்வொரு இனக் குழுக்களுக்குமிடையில் தமக்கென தனித்துவங்கள் இருக்கலாம். ஆனால் சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே அச்சமோ சந்தேகமோ இன்றி ஜனநாயக நாடொன்றை உருவாக்குவது எமது பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>அந்தப் பொறுப்பில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது பிரதானமானதாகும். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதென்பது பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்களின் ஊடாக மாத்திரமல்ல. இந்தப் பாராளுமன்றத்தில் பல்வேறு சமயங்களில் நீண்ட கலந்துரையாடல்கள்,தொடர்ச்சியான விவாதங்களின் ஊடாக முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். சட்டங்களை நிறைவேற்றுவது மாத்திரம் போதுமானதல்ல.அவற்றை உரிய வகையில் அமுல்படுத்த வேண்டும். அதே போன்று சட்டம் முறையாக அமுல்படுத்தப்படுகிறது என்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும். கடந்த காலங்களில் சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கை தகர்ந்துள்ளது. தமக்கு ஏதாவது அநீதி நடந்தால் சட்டத்தின் முன்பாக சென்று நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. தமக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டால் அந்த அநீதிக்காக சட்டத்தின் ஆதரவை பெற முடியும் என்ற நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. பொதுக்கள் மத்தியில் சட்டம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பிலான நம்பிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. சட்டம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்தாமல் நல்லாட்சியொன்றை கட்டியெழுப்ப முடியும் என்று நாம் கருதவில்லை. சிறந்த ஆட்சியொன்றை உருவாக்குவதற்கு சட்டத்தின் ஆட்சி அதில் பிரதான அம்சமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.நாம் அரசு என்ற வகையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் சட்டத்திற்கு உட்பட்டுள்ளன. எந்தவொரு அரசியல்வாதியோ அதிகாரம் உள்ள எவருமோ இனிமேல் சட்டத்தை விட உயர்வாக இருக்கமாட்டார். அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். அதே போன்று சட்டம் மீதான மக்களின் வீழ்ச்சியடைந்த நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதில் எவரிடமும் பலிவாங்கவோ துரத்திச் சென்று வேட்டையாடும் நோக்கமோ எமக்குக் கிடையாது. அனைவரினதும் அரசியல் செய்யும் சுதந்திரத்தை உறுதி செய்வோம். பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்ஆனால் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய பல குற்றச் செயல்கள் உள்ளன. அவை காலத்தில் போக்கில் மூடிமறைக்கப்படும் என குற்றவாளிகள் நினைத்தால் அது சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கையை வீழுச்சியடையச் செய்வதாக அமையும். சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதாக இருந்தால் சர்ச்சைக்குரிய குற்றச் செயல்கள் தொடர்பில் மீள விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டோருக்கு நிதியும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுக்க வேண்டும். பல்வேற சந்தர்ப்பங்களில் நாட்டில் நடந்துள்ள குற்றச் செயல்கள் அரசியல் மேடைகளில் அரசியல் கோசங்களாக பயன்படுத்தப்பட்டன.ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் அது தொடர்பில் நியாயத்தை நிலைநாட்ட தவறியுள்ளன.சர்ச்சைக்குரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையோரை அம்பலப்படுத்துவோம். அவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவோம். பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தை நிலைநாட்டுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கிறோம். சட்டம் ,நியாயம் என்பன நிலைநாட்டப்படும் ஆட்சியொன்று எமக்கு அவசியம்.அதனை இந்த மக்கள் ஆணையிலாவது நிலைநாட்ட தவறினால் மீள அவ்வாறான ஆட்சிதொடர்பில் கனவு காண்பதில் எந்தப் பயனும் இல்லை. இந்த மக்கள் ஆணையில் அந்த நோக்கம் உள்ளது. அந்த ஒப்பாரி உள்ளது. இந்த மக்கள் ஆணையில் தமது இறந்த தமது உறவினரின் வெளிப்பாடு உள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் நண்பர்களின் ஒப்பாரி இந்த மக்கள் ஆணையில் இருக்கிறது. அவர்களுக்கு நாம் நியாயத்தை நிலைநாட்டாவிட்டால் யார் நிறைவேற்றப் போகிறார்கள்.யாருக்குப் பொறுப்புக் கொடுக்க முடியும்?அவற்றை நிறைவேற்றாவிட்டால் நீதி,நியாயம் தொடர்பிலான கனவுகள் இந்த நாட்டில் மடிந்து போகும். கனவில் கூட நீதி,நியாயம் தொடர்பான எதிர்பார்ப்பு நாட்டுமக்கள் மத்தியில் ஏற்படும் என நினைக்கவில்லை. அதனால் நீதி,நியாயம் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். குற்றங்கள் தொடர்பிலும் ஊழல் மோசடி தொடர்பிலும் சட்டத்தை நிலைநாட்டி சட்டத்தின் ஆட்சியையம் சட்டம் தொடர்பான மக்களின் நம்பிக்கையையும் மீள உறுதிப்படுத்துவோம். அதனை நிறைவேற்ற வேண்டும். அதனை நாம் செய்யாவிட்டால் யார் செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எம்முன் உள்ளது. பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவோம்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>இந்த ஆட்சி எமக்குக் கிடைத்த போது நாம் எதிர்க்கட்சி அரசியலில் ஈடுபட்டிருந்தோம். பொருளாதாரத்தின் ஆழத்தை நாம் அறிந்திருந்தோம். எமது பொருளாதாரம் பெரும் ஆழத்தில் பாரிய பரப்பில் சிக்கியிருக்கிறது. மிகச்சிறிய நூலொன்றில் தொங்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரம் தான் எம்முன் உள்ளது. இந்தப் பொருளாதாரத்தினால் பாரிய அதிர்ச்சிகளை தாங்க முடியாது. இப்பொருளாதாரத்திற்கு பாரிய திருப்பங்கள் சரிவராது. அதனால் ஆட்சிக்கு வந்தவுடன் பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் பொருளாதாத்துடன் தொடர்புள்ள குழுக்களின் நம்பிக்கை உறுதிப்படுத்துவது எமது எதிர்பார்ப்பாக இருந்தது. பொருளாதார நெருக்கடியின் அளவின் காரணமாக எமது சிறு தவறும் பாரிய விளைவை ஏற்படுத்தும். சிறு அதிர்ச்சியும் இந்த பொருளாதாரத்திற்கு ஒத்துவராது.எனவே இந்தப் பொருளாதாரத்தை வீழ இடமளிக்காத வகையில் சகல சந்தர்ப்பங்களிலும் அனைத்து முடிவுகளையும் சகல கோணங்களிலும் சிந்தித்து மிகவும் மென்மையாக எடுக்க வேண்டியுள்ளது. எமக்கு தவறு செய்வதற்காக வாய்ப்பை இந்த பொருளாதாரம் வழங்கவில்லை.எனவே இந்தப் பொருளாதாரத்தை வழிநடத்துகையில் மென்மையான அனைத்து இடங்கள் குறித்தும் சிந்தித்து ஆராய்ந்து முடிவுகள் எடுக்க வேண்டும்.அதன் படி நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டிய ஆட்சியே கிடைக்கும் என்பதை கூறியிருந்தோம். அதனால் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டினை எட்டியுள்ள ஒரு நாட்டிற்கு அந்த ஒப்பந்தத்தை விடுத்துச் செல்ல முடியாது என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம். அதன்படி சர்வதேச நாணயநிதிய உடன்பாடுகளுக்கு அமைவாக பொருளாதாரத்தை கையாள்வதாக பொதுத் தேர்தலில் மக்களுக்கு உறுதியளித்தோம். அதன் படி பல செயற்பாடுகளை முன்னெடுக்கிறோம். தற்போது மூன்றாவது மீளாய்வுக் கூட்டம் தாமதமாகியுள்ளது. இதனை செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கவேண்டியிருந்தது. மூன்றாவது மீளாய்வுக் கூட்டத்தை ஆரம்பிக்க சில காலம் பிடித்தது. பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் கடந்த 17 ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்தனர். கடன் மறுசீரமைப்பு குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்த வாரத்திற்குள் பணியாளர் மட்ட ஒப்பந்ததில் 23 ஆம் திகதி கைச்சாத்திட முடியம் என எதிர்பார்க்கிறோம். சர்வதேச நாணய நிதியத்துடனான பயணத்தில் அதில் முக்கியமாக முன்னெடுப்பாகும். சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாட்டின் படி செயற்படுவோம்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>கடன் மறுசீரமைப்பும் அதனுடனான உடன்பாடுகளில் அடங்குகிறது. நாம் ஆட்சியை பொறுப்பேற்ற போது கடன்மறுசீரமைப்பு உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. வர்த்தக சந்தையில் பிணைமுறி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் அதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டதாக ஊடகங்களின் ஊடாக அறிந்தோம். இருவருடங்களுக்கு மேலாக பேச்சுகள் நடைபெறுகிறது.கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவு செய்யாமல்பொருளாதாரத்தை முன்னெடுப்பது சிரமமானது. கடன் மறுசீரமைப்பு பேச்சுக்களின் இறுதிக்கட்டமே நாம் ஆட்சிக்கு வருகையில் காணப்பட்டது. அந்த முன்னெடுப்புகள் சாதகமானதா பாதகமானதா என தற்பொழுது விவாதிப்பதில் பயனில்லை.அது தான் யதார்த்தம். விரைவில் ஒவ்வொரு நாடுகளுடனும் தனித்தனியாக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம். வர்த்தகக் கடன் தொடர்பில் ஆரம்ப கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் அந்த பணிகளை நிறைவு செய்ய முடியும் என நம்புகிறோம். சர்வதேச நாணய நிதியத்துடனான கடன்மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாட்டை இவ்வருடத்திற்குள் வெற்றிகரமாக நிறைவுசெய்ய இயலுமாகும். பணியாளர் மட்ட உடன்பாடு இவ்வாரம் எட்டப்படுவதோடு பொருளாதாரத்தை நம்பகமான நிலைக்கு கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கும்.நாம் கொள்கை ரீதியில் எமது பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள ஆழமான நெருக்கடிகளுக்கு இந்த நிகழ்ச்சிநிரல் மாத்திரம் போதுமானது என கருதவில்லை.எமது நிதித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிர்வகிப்பதற்கு இந்த செயற்பாடுகள் போதுமானதாக இருக்கும். ஆனால் எமது பொருளாதார முறைமை பாரிய சரிவை கண்டிருக்கிறது.புதிய பொருளாதார மூலோபாயங்கள் 03 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>எமது பொருளாதாரத்திற்கு பாரிய மூலோபாய எழுச்சி அவசியம்.அதில் மூன்று அம்சங்கள் அடங்கும் .எமது பொருள் சேவைகள் உற்பத்தித் துறையில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்கை மேல்மாகாணம் வழங்குகிறது. அது போலவே ஏனைய பகுதி மக்களின் பங்களிப்பும் அதற்கு அவசியப்படுகிறது.பொருட்கள் சேவைகள் உற்பத்தியில் வேகமான முன்னேற்றம் அவசியம். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பும் அவசியம். மக்களை கைவிட்டுச் செய்யும் பொருளாதார அபிவிருத்தியில் பயனில்லை.மக்களளை மனிதத் தூசிகளாக்கும் பொருளாதாரத்தில் பயனில்லை. அனைத்து பொருளாதார செயற்பாடுகளிலும் மக்களை பங்குதாரர்களாக்க வேண்டும். அனைத்து மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக்காமல் அதன் நன்மை மக்களை சென்றடையாது. தேசிய நிதி சிறு குழுவின் கைகளில் மாத்திரம் இருக்குமானால் அது அரசாங்கத்திலோ பொருளாதாரத்திலோ ஸ்தீர நிலையை ஏற்படுத்தாது. இயற்கை வளங்கள் பொருளாதார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. அனைவரும் இணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புகையில் அது சிறு குழுவின் கரங்களுக்கு செல்லுமானால் பொருளாதாரப் பயனம் ஸ்தீரமடையாது. சமூகமும் வலுவடையாது. பொருளாதாரத்தின் பயன் நியாயமாக மக்களை சென்றடைய வேண்டும்.சந்தைப் போக்கை நிர்வகித்து பொருட்கள் மற்றும் சேவைகளை தொடர்ச்சியாக நியாயமான விலையில் வழங்குவோம்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>சந்தையைக் கையாள்வது தொடர்பிலும் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எமது நாடு பாரிய சந்தையுள்ள இடமல்ல. சந்தையில் ஏகபோக உரிமை காணப்படுகிறது. நாளாந்த அரிசிப் பயன்பாடு 6500 மெற்றிக் தொன்களாகும். சிறிய சந்தைகளில் ஏகபோக உரிமை உருவாகலாம். பொருளாதார அடிப்படையில் எமது சந்தை நிர்ணயிக்கப்படவில்லை. ஏகபோக உரிமைப்படித்தான் எமது சந்தை நிர்ணயிக்கப்படுகிறது. பொருட்களின் விலைகளை ஏற்றி இறக்க அவர்களால் முடியும். நெல் விலையை கூட அவர்களால் நிர்ணயிக்க முடிகிறது. அரிசி விலையையும் அவர்களால் தீர்மானிக்க முடியும். இதனால் பொருட்கள் சேவைகளை பெற பாரிய கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே மீளவும் சந்தையின் போக்கை மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு நியாயமான முறையில் பொருட்கள் சேவைகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதனை அரசாங்கம் மீற முடியாது. போட்டித்தன்மை ஊடாக இதனை செய்ய முடியும். விலைகளை நிர்ணயிக்கலாம். ஆனாலும் சில துறைகளை மேற்பார்வை ஊடாக கையாளலாம். பாராளுமன்றத்தின் ஊடாக நிர்ணயச் சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.சந்தைகளிலுள்ள திரிபுநிலையை சீர் செய்ய அவை போதுமானது. அது தொடர்பான சட்டங்கள் போதுமானதா என பார்க்க வேண்டும். சில துறைகளை நாம் கையாள வேண்டும். சில துறைகள் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானவை. அவை அரச பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். வலுசக்தி சந்தையை கையாளுகையில் அரசின் பங்கும் இருக்க வேண்டும்.அவை பொருளாதாரத்தில் முக்கியமானவை.இவற்றில் ஏற்படும் சில தடுமாற்றங்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே அவ்வாறான துறைகளிலும் அரசாங்கத்தின் வகிபாகம் ஒன்று இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் அறிந்துள்ளோம்.அதே போன்று நிதித்துறை சுதந்திரமாக செயற்பட ஆரம்பித்தால் என்ன நடக்கும். மத்திய வங்கி மேற்பார்வை நிறுவனமாக செயற்படுகிறது. நிதிச் சந்தையிலும் அரச வகிபாகம் இருக்க வேண்டும். அடுத்து பரவலடைந்து காணப்படும் சந்தைகளுக்கு பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்காக கூட்டுறவுச் அமைப்பை வலுவானதாக மாற்றியமைக்க எதிர்பார்க்கிறோம்.சந்தையில் பலமான போட்டியாலராக கூட்டுறவுத்துறையை பயன்படுத்த இருக்கிறோம். பொருட்கள் மற்றும் சேவைகளை முன்னேற்றுவதற்காக சில துறைகளை அடையாளங் கண்டுள்ளோம். சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் துரித அபிவிருத்தி>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>சுற்றுலாத் துறையில் பெரும் பாய்ச்சலை செய்யக்கூடிய இயலுமை தொடர்பில் அறிந்துள்ளோம். அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் 8 பில்லியன் டொலர் பெறுமதியான சுற்றுலா பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கும் எதிர்பார்த்திருக்கிறோம். 2018 இல் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். அடுத்ததாக தகவல் தொடர்பாடல் துறை உலகின் அனைத்து தொழில் துறைகளிலும் தாக்கம் செலுத்துகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் நாட்டுக்கு அவசியம். தற்போது எமது நாட்டில் 85 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப தொழில்துறையினர் மாத்திரமே உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையை 5 வருடங்களில் 2 இலட்சமாக அதிகரித்துக்கொள்ள எதிர்பார்க்கிறோம். தகவல் தொழில்நுட்பத்துறை ஏற்றுமதி வருமானம் குறைவாகவே உள்ளது. 5 பில்லியன் டொலர் வருமானத்தை பெறும் வகையில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஐந்து துறைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதற்காக கல்வி,மொழி உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்துகிறோம்.