28.4 C
Jaffna
September 19, 2024
பிரான்ஸ்

பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் : பாதுகாப்பு கெமராவில் சிக்கிய முக்கிய தகவல்

பிரான்ஸில் (France) யூத சபை ஒன்றுக்கு வெளியே நடந்த குண்டு  தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவமானது, மான்ட்பெலியரின் அருகே உள்ள கடலோரப் பகுதியான லா கிராண்டே மொட்டில் உள்ள பெத் யாகோவ் சபைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்த பாதுகாப்பு கெமராவில் சந்தேகநபர் ஒருவர் பாலஸ்தீன கொடியொன்றை வைத்திருப்பது பதிவாகியுள்ளது.

இதன் படி, இந்த வெடிப்பு சம்பவமானது, பயங்கரவாத தாக்குதல் என்பது விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யூத மக்கள் மீதான தாக்குதல் இந்த சம்பவத்தின் பின்னர் பிரான்ஸில் யூதர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குப் பின்னால் பாரிய நோக்கம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

அத்தோடு, சம்பவத்தின் பின்னணியில் அந்நாட்டில் யூத மக்கள் மீதான தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரான்ஸ் கட்சித் தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி மேக்ரான்: அரசியலில் அடுத்த கட்டம்

User1

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது பதிவான சைபர் தாக்குதல்கள்

User1

Leave a Comment