இங்கிலாந்து மற்றும் இலங்கைஅணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் மைதானத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பந்து பரிமாற்றம் குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் வுட் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸின்போது, சர்ச்சைக்குரிய பந்து மாற்றம் வர்ணனையாளர்கள் மற்றும் வீரர்களிடமிருந்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
41வது ஓவருக்குப் பின்னர், இங்கிலாந்து அணியினரின் தேய்ந்துபோன பந்தை மாற்றுவதற்கான கோரிக்கையை நடுவர் ஏற்றுக்கொண்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் வுட், இது ஒரு மோசமான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணி 24 ஓட்டங்கள்; முன்னிலையுடன் 4 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை எடுத்திருந்தபோது சர்ச்சைக்குரிய பந்து பரிமாற்றம் நடந்தது,
குறித்த நேரத்தில் பந்து பரிமாற்றம் கோரப்பட்டபோது, அதேபோன்ற தேய்ந்த பந்தே பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
எனினும் புதிய பந்தை நடுவர்கள் அனுமதித்தனர். இதன் காரணமாகவே இலங்கை அணியின் விக்கட்டுக்கள் இழக்கப்பட்டதாக பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.