தேர்தல் அலுவலகத்தினால் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் வாக்காளர்களை அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வு
இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் வாக்காளர்களை அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தினால் நேற்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலக பிரதி ஆணையாளர் எஸ் எம் சுபியான் தலைமையில் இடம்பெற்றது
மாவட்டத்தில் இடம்பெற உள்ள தபால் மூல வாக்களிப்பின் போது அத்தாட்சி படுத்தும் அதிகாரிகளுக்கான பொறுப்புகளும் அவர்களது கடமைகளும் சம்பந்தமாக வாக்களிப்பின் போது ஏற்படும் சட்டரீதியான சிக்கல்கள் போக்குவரத்து பாதுகாப்பு சம்பந்தமான விதிமுறைகள் பற்றியும் இங்கு கலந்து கொண்டவர்களுக்கு விரிவான விளக்கங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜேஜே முரளிதர னால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது முதன்முறையாக பணியாற்றவிருக்கும் அதிகாரிகளுக்கு விசேட கவனம் செலுத்தி அவர்களுக்கான அறிவுரைகளும் இங்கு வழங்கி வைக்க ப்பட்டது
தபால் மூல வாக்களிப்பின் போது வாக்காளரை அத்தாட்சி படுத்தல் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் வாக்களிப்பின் இறுதியில் அக்கச்சீட்டுகளை பாதுகாப்பாக தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்த சம்பந்தமாகவும் தேர்தல் கடமை இருக்கவுள்ள அத்தாட் சிப்படுத்தும் அதிகாரிகளுக்கு இங்கு அறிவுறுத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலக மற்றும் அரச திணைக்கலங்களில் உள்ள தேர்தல் கடமைகளில் பணியாற்றுகின்ற உயர் அதிகாரிகளுக்கு தபால் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் களுடனான கலந்துரையாடல். முன்னெடுக்கப்பட்டது
இதன்போது கலந்து கொண்ட அத்தாட்சி படுத்தும் அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப் பன்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சம்பந்தமான தேர்தல் திணைக்களத்தின் விதிமுறைகளை இங்கு கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது
மாவட்ட செயலக மற்றும் அரச தேர்தல் திணைக்களங்களில் அதிகாரிகள் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் கலந்துக்கொண்டிருந்தனர்.