யாழ்.வடமராட்சிக் கிழக்கு – கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் சிறுவர் கண்காட்சி இன்று(28) இடம்பெற்றது.
முன்பள்ளியில் மு.ப 10.00 மணியளவில் அவ் முன்பள்ளியின் ஆசிரியர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இவ் நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் உருவாக்கப்பட்ட ஆக்கப் பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.
இங்கு பிள்ளைகளின் ஆற்றல் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் அவர்களினால் தயாரிக்கப்பட்ட பல்வேறுபட்ட ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் பெற்றோர்களது ஆக்கங்களையும் காணக்கூடியதாக இருந்தது. இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெரும்பாலான பொருட்கள் கழிவுப் பொருட்களைக் கொண்டு ஆக்கப்பட்டவையாக இருந்தமை அதன் சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் நித்தியவெட்டை வைத்தியசாலையின் வைத்தியர் Dr.திவ்யா, முன்பள்ளிகளின் இணைப்பாளர் ஜெயந்தினி,
முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.