சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!
வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் கருத்திட்டத்திற்கு அமைவாக சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரஜா சிவில் பொலிஸ் குழுக்கள், கிராமமட்ட பொது அமைப்புக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கிளிநொச்சி மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம், வீதி போக்குவரத்தில் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.திசாநாயக்க அவர்களின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.




