உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மாவீரர் வார நிகழ்வுகள் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
135 பார்வைகள்

வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி அணிதிரளுமாறு வடமராட்சி மக்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தீருவில் சதுக்கத்தில் உடைக்கப்பட்ட நிலையில் உள்ள குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவுத் தூபிச் சிதைவுகளுக்கு மத்தியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் மாவீரர் நாள் நிகழ்வு வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் வருடா வருடம் மிகவும் எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாவீரர் வாரம் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், தீருவில் சதுக்கத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தீருவில் சதுக்க மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினரால் மாவீரர்களுக்குச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுச் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, தீருவில் சதுக்கப் பகுதி துப்பரவு செய்யப்பட்டு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடிகள் கட்டப்பட்டு மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

வரும் நவம்பர் 27ஆம் திகதி மாலை வழமை போன்று தீருவில் சதுக்கத்தில் மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த நேரத்தில் வல்வெட்டித்துறை மற்றும் வடமராட்சி வாழ் உறவுகள் அனைவரும், தமிழர் தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு நினைவேந்தல் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியாவில் டெங்கு பரவல் தீவிரம்.!

வவுனியா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பலர் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு அபாயம் கொண்ட இந்நோய்…

136 0 0
இலங்கை செய்திகள்

தமிழரசின் வவுனியா “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார அனுஷ்டிப்பு ஆரம்பம்.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார அனுஷ்டிப்பு நிகழ்வின் முதல்நாள் ஆரம்ப நிகழ்வு இன்று (21.11.2026) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.…

138 0 0
இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்.!

மாவீரர் வாரம் இன்றையதினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில்…

144 0 0
இலங்கை செய்திகள்

மதில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உ**யிரிழப்பு.!

இரத்தினபுரி – பலாங்கொடை, பாங்கியாவத்தை பகுதியில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் முன்பாகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மதில் சுவருக்கு…

132 0 0