உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பெருந்தொகை பீடி இலைகள் கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
136 பார்வைகள்

சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 460 கிலோகிராம் பீடி இலைகளை நேற்று (20) வெள்ளிக்கிழமை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கற்பிட்டி கப்பலடி மற்றும் சின்னமுக்கரை கடற்கரைப் பகுதிகளை அண்மித்து முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நிறுவனத்தினால் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கப்பலடி மற்றும் சின்னமுக்கரை கடற்கரைப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் காணப்பட்ட 12 பொதிகளை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர்.

மேலும், கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 460 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் அடங்கிய பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியாவில் டெங்கு பரவல் தீவிரம்.!

வவுனியா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பலர் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு அபாயம் கொண்ட இந்நோய்…

136 0 0
இலங்கை செய்திகள்

தமிழரசின் வவுனியா “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார அனுஷ்டிப்பு ஆரம்பம்.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார அனுஷ்டிப்பு நிகழ்வின் முதல்நாள் ஆரம்ப நிகழ்வு இன்று (21.11.2026) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.…

138 0 0
இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்.!

மாவீரர் வாரம் இன்றையதினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில்…

145 0 0
இலங்கை செய்திகள்

மதில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உ**யிரிழப்பு.!

இரத்தினபுரி – பலாங்கொடை, பாங்கியாவத்தை பகுதியில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் முன்பாகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மதில் சுவருக்கு…

132 0 0