இருவேறு விபத்துக்களில் இருவர் உ**யிரிழப்பு.!
மாலபே மற்றும் கல்கிசை ஆகிய பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (20) உந்துருளி மற்றும் மகிழுந்து மோதி இடம்பெற்ற இருவேறு வீதி விபத்துக்களில், 79 வயதுடைய மூதாட்டி உட்பட இரண்டு பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனகுரு மாவத்தையில், ஹொரஹேன சந்தியிலிருந்து ஹோகந்தர சந்தி நோக்கிப் பயணித்த உந்துருளி ஒன்று, வீதியோரமாக நடந்து சென்ற பாதசாரி மீது மோதியதில் முதலாவது விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி மற்றும் உந்துருளி செலுத்துநர் ஆகிய இருவரும் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த பாதசாரி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை, கல்கிசை பகுதியில் காலி – கொழும்பு வீதியில் மொரட்டுவை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பெண் பாதசாரி மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த பெண், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய மூதாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இரண்டு விபத்துக்கள் குறித்தும் மாலபே மற்றும் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


