மாகஸ்தோட்ட கீழ் பிரிவு தோட்டத்திற்கான பாதை திறந்து வைப்பு.!
நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் தலைமையில் நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட மாகஸ்தோட்ட கீழ் பிரிவு தோட்டத்திற்கான 465 மீற்றர் கொண்ட கொங்றீட் பாதை இன்று (21) காலை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களான சரத்குமாரசிங்க, ரங்கன் பண்டார, அசோக மற்றும் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்கள் அத்தோடு பீட்ரு தோட்ட முகாமையாளர் நிரோசன் பீரிஸ் அவர்களுடன் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் தோட்ட பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
நீண்ட காலமாக பயன்படுத்த முடியாமல் இருந்த குறித்த வீதி சிறப்பாக டித்வா அனர்த்த செயல்திட்டத்தின் கீழ் 43 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இந்த வீதி கொங்றீட் இடப்பட்டமை குறிப்பிடதக்கது.




